திருக்குறள் -சிறப்புரை :827
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். --- ௮௨௭
வில்லினது வளைந்த வணக்கம் எய்துவதற்குத் அணியமாதலால் அது எதிர்நிற்போர்க்குத்
தீங்கு இழைக்கும் அவ்வாறே பகைவர் வளைந்து வணக்கத்தோடு
கூறும் சொற்களும் தமக்கு நன்மை தருவதாக் கருதக்கூடாது.
“நெறியின் நீங்கியோர் நீரல
கூறினும்
அறியாமை என்று அறியல் வேண்டும்.”
–சிலப்பதிகாரம்.
நெறி தவறி நடப்போர் தகாதவற்றைக் கூறினாலும் அவர்கள் அறியாமையால் அவ்வாறு
கூறினார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக