சனி, 10 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :813


திருக்குறள் -சிறப்புரை :813
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.--- ௮௧௩
நட்பின் பெருமை அறியாது, நண்பர்களால் தனக்குக் கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பர்களும் ; கொடுப்பாரை நோக்காது கொடுக்கும் பொருளின் அளவைக்காணும் பொருட் பெண்டிரும் ; பிறர் துன்பம் கருதாது அவர் சோர்ந்திருக்கும் நேரம் பார்த்துக் களவாடும் கள்வரும் ஒரே தன்மை உடையவராவர்.
” செய்நன்றி கொல்லன்மின் தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகல்மின் பொருள்மொழி நீங்கள்மின்.” –சிலப்பதிகாரம்.
செய்நன்றி மறவாதீர்; தீயவரோடு நட்புக் கொள்ளாதீர் ; பொய்ச் சான்று சொல்லாதீர் ; அறவோர் அவையை நீக்காது இருப்பீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக