திருக்குறள் -சிறப்புரை :815
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. – ௮௧௫
(செய்து ஏமம்)
நட்புச் செய்து வைத்தாலும் உற்றநேரத்தில் துணையாகாத கீழ்மக்கள்(தீயோர்) நட்பைப் பெறுதலின்
பெறாமை நன்று.
“கனம் பொதிந்த நூல் விரித்துக்
காட்டினும் கீழ்தன்
மனம் புரிந்தவாறே மிகும்.
–நாலடியார்.
மேன்மை நிறைந்த நூல்களை விரித்துரைத்தாலும் அவற்றைக் கருத்தில் கொள்ளாத
கீழ்மகன் தன் மனம் விரும்பிய வழியேதான் செல்வான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக