திருக்குறள் -சிறப்புரை :822
இனம்போன்று இனமல்லர் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.--- ௮௨௨
புறத்தே இனமான நட்புடையார்போன்று நடித்து உள்ளத்தால் ஒன்றாதவர் நட்பு. கள்ளத்தனம் கொண்ட மகளிர் மனம்போல உள் ஒன்றும் புறம் ஒன்றுமாக வேறுபடும். நட்பும் கற்பும்
ஒரே தன்மை உடையவையே.
”பெருகுவது போல் தோன்றி
வைத் தீப்போல்
ஒருபொழுதும் செல்லாதே நந்தும்
--- அருகெல்லாம்
சந்தன நீள் சோலைச் சாரல்
மலை நாட
பந்தம் இலாளர் தொடர்பு.
–நாலடியார்.
பக்கங்களிலெல்லாம் சந்தன மரங்களுடைய பெரிய தோப்புகளோடு கூடிய சாரல் மலைகள்
உடைய நாட்டிற்கு அரசனே..! மனத்தால் ஒன்றாதவருடைய நட்பு வைக்கோல் போரில் பற்றிய நெருப்பைப்போல
வளர்வது போலத் தோன்றி ஒரு பயனுமின்றிக் கெடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக