திருக்குறள் -சிறப்புரை :817
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும். --- ௮௧௭
உதட்டளவில் நகைத்து நண்பராகப் பழகுவோரைவிடப் பகைவரால் வரும் பகைமை பத்துக்கோடி
மடங்கு நன்றாம்.
“எய்திய செல்வத்த ராயினும்
கீழ்களைச்
செய் தொழிலாற் காணப்படும்.”----நாலடியார்.
பெருஞ் செல்வத்தைப் பெற்றவர்களாயினும் கீழ்மக்களை அவர்கள் செய்யும் செயல்களால்
அறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக