திருக்குறள் -சிறப்புரை :812
உறின்நட்டு அறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.--- ௮௧௨
(அறின் ஒரூஉம்)
தனக்குப் பயன் கருதி நட்புச்செய்து, பயன்பெற்றபின்பு விலகிச்செல்லும்
தீயவர்களின் நட்பினைப் பெற்றாலும் இழப்பினும் என்ன பயன் ? ஒரு பயனும் இல்லை என்பதாம்.
” தெளிவிலார் நட்பிற் பகை நன்று சாதல்
விளியா வரு நோயின் நன்று….” நாலடியார்.
பண்பில்லாதவருடைய நட்பைக் காட்டிலும் அவருடைய பகை
நல்லது ; தீராத கொடிய நோயைக் காட்டிலும் சாதல் நன்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக