திங்கள், 12 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :814


திருக்குறள் -சிறப்புரை :814
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை. --- ௮௧௪
துணையாக நிற்பதுபோல் நின்று போர்க்களத்தில் புகுந்தபோது கைவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரையைப்போன்று உறவாடும் நண்பர்களைவிடத் தனிமையே இனிமையுடையது.
”உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.—குறள்.798.
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமல் இருக்க வேண்டும் அதுபோல் துன்பம் வந்தபோது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக