ஞாயிறு, 18 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :820

திருக்குறள் -சிறப்புரை :820
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.--- ௮௨0
தனியாக வீட்டில் இருக்கும்போது நட்பாகப் பழகுதலும் பலரும் கூடியிருக்கும் அவையின்கண் பழித்துரைத்தலுமாகிய வஞ்சக இயல்பு கொண்டவரோடு எவ்வித தொடர்பு கொள்ளாமல் விலகி இருத்தல் வேண்டும்.
”இகழ்தலின் கோறல் இனிதே மற்றில்ல
புகழ்தலின் வைதலே நன்று. –நாலடியார்.
ஒருவரை வெறுத்து அவர் மனம் புண்படி வசைமொழிகளைக் கூறுவதைவிட அவரைக் கொன்றுவிடுவது நன்றாம் ; 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக