சனி, 17 மார்ச், 2018

திருக்குறள் -சிறப்புரை :819


திருக்குறள் -சிறப்புரை :819
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.--- ௮௧௯
சொல்வது ஒன்று செய்வது வேறு என்று வஞ்சக நெஞ்சம் கொண்டவரோடு கொண்ட நட்பு நனவில் மட்டுமன்று கனவிலும் துன்பம் தருவதாகும்.
‘உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே” -----மதுரைக்காஞ்சி.
ஒரு பொய் கூறுவதால் உயர்ந்த உலகம் அமிழ்தொடு கிடைப்பதாயினும் அதனை விட்டொழித்து வாய்மையுடன் நட்புச் செய்தலை உடையவன் நெடுஞ்செழியன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக