செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –333.

 

தன்னேரிலாத தமிழ் –333.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன். –குறள்,996.

 

 நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்

நாட்டு மக்கள் மனந்தனிலே நாணயத்தை வளர்க்கணும் (நல்ல)

 

பள்ளி என்ற நிலங்களிலே கல்வி தன்னை விதைக்கணும்

பிள்ளைகளைச் சீர்திருத்தி பெரியவர்கள் ஆக்கணும்

கன்னியர்க்கும் காளையர்க்கும் கட்டுப்பாட்டை விதித்து

கற்பு நிலை தவறாத காதல் பயிர் வளர்த்து

அன்னை தந்தாயானவர்க்கும் நம் பொறுப்பை விதைத்து

பின்வரும் சந்ததியைப் பேணும்முறை வளர்த்து

இருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்

இல்லாதார் வாழ்க்கையிலே இன்பப் பயிர் வளர்க்கணும் (நல்ல)

 

பார் முழுதும் மனித குலப் பண்புதனை விதைத்து

பாமரர்கள் நெஞ்சத்திலே பகுத்தறிவை வளர்த்து

போர்முறையைக் கொண்டவர்க்கு நேர்முறையை விதைத்து

சீர்வளரத் தினமும் சினேகமதை வளர்த்து

பெற்ற திருநாட்டினிலே பற்றுதனை விதைக்கணும்

பற்றுதனை விதைத்துவிட்டு நல்ல ஒற்றுமையை வளர்க்கணும் (நல்ல)

--கவிஞர் உடுமலை நாராயணகவி, படம்: விவசாயி, 1967.

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –332.

 

தன்னேரிலாத தமிழ் –332.

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே உள. –குறள்.223


மன்னவர் பொருளைக் கைகொண்டு நீட்டுவார்

மற்றவர் பணிந்து கொள்வார்

மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான்

மற்றவர் எடுத்துக் கொள்வார்

வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல்

வைத்தவன் கர்ணவீரன்

வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன்

வாழ்கவே வாழ்க! வாழ்க..!

 

என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்

என்றிவர்கள் எண்ணும் முன்னே

பொன்னும் கொடுப்பான் பொருள் கொடுப்பான்

போதாது போதாது என்றால்

இன்னும் கொடுப்பான் இவையும்

குறையென்றால் எங்கள் கர்ணன்

தன்னைக் கொடுப்பான் தன்னுயிரும்

தான் கொடுப்பான் தயாநிதியே!

 --கவிஞர் கண்ணதாசன்,படம்: கர்ணன்,1964.

 

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக் கடிகை (28) அலைப்பான் பிறவுயிரை ஆக்கலும் ...

தமிழ்ப் பணி மன்றம்: நான்மணிக் கடிகை (28) அலைப்பான் பிறவுயிரை ஆக்கலும் ...:   நான்மணிக்கடிகை ! ---------------------------------------------- -------------------------------------------------------------- சங்க க...

தன்னேரிலாத தமிழ் –331.

 

தன்னேரிலாத தமிழ் –331.

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை. –குறள், 872.

 

சங்கே முழங்கு ….சங்கே முழங்கு…..சங்கே முழங்கு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்

சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு

 

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்…

பொங்கும் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம்

நாங்கள் ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்

சிறியோர்க்கு ஞாபகம் செய்து முழங்கு சங்கே

 

வெங்கொடுமை சாக்காட்டில்

விளையாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள்

கங்கையைப் போல் காவிரி போல்

கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்

வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரம்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்.

--புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், படம்: கலங்கரை விளக்கம்,1965.

சனி, 28 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –330.

 

தன்னேரிலாத தமிழ் –330.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு. – குறள்,60.

 

ஆனந்தம் இன்று  ஆரம்பம்மனம்

அன்பில் பிணைந்தால்பின்

அதுவே பேரின்பம் (ஆனந்தம்)

 

ஆடும் கடலும் பொன்னி

           யாறும் கலந்தது போல்

கூடும் இவர்களிரு

                பேரும் தேடும் உயர் (ஆனந்தம்)

 

மீனுடன் மானும் மங்கை

               விழிகளில் துள்ளுதே

விந்தைமிகும் மெளனம்

                   வீரத்தை வெல்லுதே

தேனைச் சுமந்த மலர்

              மாலைச் சுமந்த அவள்

நாணிக் குனிந்த முகம்

            நல்ல பண்பைச் சொல்லுதே (ஆனந்தம்)

 

நல்ல குடும்பம் ஒரு

                 பல்கலைக் கழகம் என்று

தெள்ளுத் தமிழ்க் கவிஞன்

                 தெளிவுரை சொன்னதுண்டு

இல்லறம் ஏற்பவர்கள்

              இதனை மனதில் கொண்டு

இன்பமுடன் நடந்தால்

                  வாழ்வுக்கு மிக நன்று (ஆனந்தம்)

--கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: கல்யாணிக்கு கல்யாணம், 1959.

 

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –329.

 

தன்னேரிலாத தமிழ் –329.

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை. –குறள்.331.

கருவுலகில் உருவாகி

மறுவுலகில் வரும் நாளைக்

கண்டறிந்து சொல்வாருண்டுஇந்தத்

திருவுடலில் குடியிருக்கும்

சீவன் பிரியும் நாளைத்

தெரிந்தொருவர் சொன்னதுண்டோ?

 

வருவனவும் போவனவும்

விதியென்று வைத்தவன்

வாழ்வினை விதைத்த உழவன்அவன்

அறுவடைக் காலத்தில்

அழுதாலும் தொழுதாலும்

அனுதாபம் காட்டுவானோ?

---கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: செளபாக்கியவதி,1957.

 விரைவில் விற்பனைக்கு...!

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –328.

 

தன்னேரிலாத தமிழ் –328.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு. –குறள், 735.

 

எங்க நாடு இது எங்க நாடு

எங்கும் புகழ் தங்கும் நாடுவளம்

பொங்கும் நாடுவந்த

எல்லார்க்கும் எடங்கொடுத்து

ஏமாந்த நாடு  (எங்கநாடு)

 

தங்கக் குடிசை இல்லாமெ

தரித்திர மானாலும் தலைவிதின்னு

நம்பிக்கிட்டுசாமியெனக்

கும்பிடும் நாடு (எங்க நாடு)

 

சங்கம் வச்சு மொழி வளர்த்த

தமிழ் நாடு….. இப்போ

தாய் மொழியைக் கதம்பம் பண்ணும்

சண்டாள நாடு

சொந்த நாட்டு மனுசங்களை தூக்கிப் பேசாது

சொரண்ட  வந்த ஆளுக்கெல்லாம்

தொழுது மாலை போடும் நாடு

 

உலகுக் கெல்லாம் தருமம் சொல்லி

உயர்ந்த நன்னாடுஇப்போ

உயர்வு தாழ்வு பேசிப்பேசி

ஒத்துமையில்லா நாடுஇது

எங்க நாடுஎங்கும்

புகழ் தங்கும் நாடு …..”

   ----கவிஞர் டி.கே. சண்முகம், படம் : ஓர் இரவு, ..

 

25/8

புதன், 25 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –327.

 

தன்னேரிலாத தமிழ் –327.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும். – குறள். 63.

 

இந்தப் பச்சைக்கிளிக்கொரு  செவ்வந்திப் பூவில்

தொட்டிலைக் கட்டி வைத்தேன்அதில்

பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை

மெல்லென இட்டு வைத்தேன்

நான் ஆராரோ என்று தாலாட்ட

இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட (பச்சை)

 

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான்

மண்ணில் பிறக்கையிலேபின்

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்

அன்னை வளர்ப்பதிலே

 

தூக்க மருந்தினைப்போன்றவைகள் பெற்றவர்

போற்றும் புகழுரைகள்நோய்

தீர்க்கும் மருந்தினைப் போன்றவைகள்கற்றவர்

கூறும் அறிவுரைகள்

ஆறுகரையில் அடங்கி நடந்திடில்

காடு வளம் பெறலாம்தினம்

நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில்

நாடு நலம் பெறலாம்

 

பாதை தவறிய கால்கள் விரும்பிய

ஊர் சென்று சேர்வதில்லைநல்ல

பண்பு தவறிய பிள்ளைகள் பெற்றவர்

பேர் சொல்லி வாழ்வதில்லை (பச்சை)

    ----கவிஞர் புலமைப்பித்தன்,  படம் : நீதிக்குத் தலைவணங்கு, ..

 

 

 


திங்கள், 23 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –326.

 

தன்னேரிலாத தமிழ் –326.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு. –குறள், 72.

 

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் - அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.

 

ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து

வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்

கடவுளிலே கருணைதன்னை காணலாம்அந்தக்

கருணையிலே கடவுளையும் காணலாம்

நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்அங்கு

ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

பாவம் என்ற கல்லறைக்குப் பல வழி என்றும்

தர்ம தேவன் கோயிலுக்கு இருவழி

இந்த வழி ஒன்றுதான் எங்கள் வழி என்று நாம்

நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோ (ஒன்றே)

 

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்அவர்

என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம்

நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்.”

    --கவிஞர் புலமைப்பித்தன், படம் : பல்லாண்டு வாழ்க : ..

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –325.

 

தன்னேரிலாத தமிழ் –325.

பகையென்னும் பண்பி லதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று. –குறள்.871.

 

 பகைகொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்

தீராத கோபம் யாருக்கு லாபம்

வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக

கூரையை எரிப்பாரோஒரு

வேதனை தன்னை விலைதந்து யாரும்

வாங்கிட நினைப்பாரோ ?

 

இதயத்தைத் திறந்து நியாயத்தைப் பேசு

வழக்குகள் முடிவாகும்

இருக்கின்ற பகையை வளர்த்திடத்தானே

வாதங்கள் துணையாகும்

 

வற்றிய குளத்தைப் பறவைகள் தேடி

வருவது கிடையாது

வாழ்க்கையில் வறுமை வருகிறபோது

உறவுகள் கிடையாது

பாலைவனத்தில் விதைப்பதனாலே

பயிரொன்றும் விளையாது

பட்ட பின்னாலே வருகிற ஞானம்

யாருக்கும் உதவாது.”

 ---கவிஞர் புலமைப்பித்தன், படம்:  எல்லோரும் நல்லவரே, ..

சனி, 21 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –324.

 

தன்னேரிலாத தமிழ் –324.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. –குறள்.5.

 

இறைவன் படைத்த உலகை எல்லாம்

மனிதன் ஆளுகின்றான்

மனிதன் வடித்த சிலையில் எல்லாம்

இறைவன் வாழுகின்றான்

உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்

உண்மை பிறப்பதில்லை

உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்

ஒன்றும் நடப்பதில்லை !

இரண்டு மனிதர் சேர்ந்தபோதும்

எண்ணம் வேறாகும்

எத்தனை கோயில் இருந்தபோதும்

இறைவன் ஒன்றாகும்

இசையால் இறைவனை இரங்க வைப்பது

மனிதனின் குணமாகும்அந்த

இசையில் மயங்கி இரங்கி வருவது

இறைவன் மனமாகும்.

 --கவிஞர் பூவை செங்குட்டுவன், படம் : வா ராஜா வா,1969.

 

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –323.

 

தன்னேரிலாத தமிழ் –323.

தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

மேவன செய்துஒழுக லான்.-குறள்.1073.

 

சிந்தித்தால் சிரிப்புவரும்

மனம் நொந்தால் அழுகைவரும்

தென்றலும் புயலாய் மாறி மாறி

வரும் மானிடரின் வாழ்வே   (சிந்தி)

 

மோசடிப் பாதையிலே

காசினைச் சேர்த்தாலும்

பாசமுடன் புகழ்பாடி

பலபேரும் வரவேற்பார்

வாசமில்லா மென்மலராய்

வாடிய ஒரு பூங்கொடியாய்

 வாழ்வில் நல்லவனே தாழ்வினை அடைவதா? (சிந்தி)

 

வானம் தனிலே திரியும்

பறவை மிருகமெல்லாம்

வயிற்றுப் பசியாலே

வாடி மடிவதில்லை

மனதிலே சிறந்தவனாம்

மண்ணிலே உயர்ந்தவனாம்

மனிதனை நினைத்தாலே

மாபெரும் வெட்கமடா ! (சிந்தி)

 --கவிஞர் திருச்சி தியாகராஜன், படம் ; செங்கமலத்தீவு, 1962.

 

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –322

 

தன்னேரிலாத தமிழ் –322

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல். –குறள். 443

 

பூந்தென்றல் இசை பாட

புகழ் பாணர் கவி பாட

சான்றோர்கள் மடி தன்னில்

விளையாடும் தமிழ் வாழ்க !

அறிவான முப்பாலும் கனிகொடுக்க

திருவாசகம் வந்து பனிதெளிக்க

கொடிபோன்ற இளம்பெண்கள் கற்பினிலே

கொலுகொண்டு முதிராத் தமிழ் வாழ்கவே (பூந்தென்)

 

வேல்தேடி எறிகின்ற வீரம் உண்டு

நூல்தேடி தருகின்ற ஞானம் உண்டு

சூல்கொண்ட குலமங்கை திருமுகம் போல்

சுடர்கின்ற புதுமஞ்சள் தமிழ் வாழ்கவே (பூந்தென்)

 --கவிஞர் மாயவநாதன், படம்: தாயின் கருணை, 1965.

 

புதன், 18 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –321.

 

தன்னேரிலாத தமிழ் –321.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து. –குறள். 398.

 

தமிழ் எங்கள் உயிரானதுகாலச்

சுழலாலும் கனலாலும்

அழியாமல் நிலையான (தமிழ்)

 

படிப்போர்க்குப் பால் போன்றதுதன்னைப்

பகைப்போர்க்கு வேல் போன்றது

தாயகத்தின் தன்மானக்

கலைத் தேரில் சதிராடும் (தமிழ்)

 

செந்தமிழும் பெண்குரலும் ஒன்றாகட்டும்தேவ

மங்கையரும் இங்கு வந்து நின்றாடட்டும்

தண்டையிட்டு வந்த அடி செண்டாகட்டும்நாதம்

தந்திதொட்ட வீணையென உண்டாகட்டும் (தமிழ்)

 

சிந்துகின்ற புன்முறுவல் முத்தாகட்டும்தேன்

பொங்குகின்ற கன்னம் பூங்கொத்தாகட்டும்

அந்தி வெயில்பட்டு உடல் பொன்னாகட்டும்கண்டு

ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும். (தமிழ்)

 ---கவிஞர் மாயவநாதன், படம் : பூம்புகார், 1964.

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –320.

 

தன்னேரிலாத தமிழ் –320.

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின். –குறள். 334.

 

இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான் அதை

இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்திட்டான் (இறந்த)

 

பறந்து பறந்து பணம் தேடி

பாவக்குளத்தில் நீராடி

பிறந்துவந்த நாள் முதலாய்

பேராசையுடன் உறவாடி (இறந்த)

 

தாயாரின் வேதனையில் பிறக்கிறான்மனுசன்

தன்னாலே துடிதுடிச்சி இறக்கிறான்இடையில்

ஓயாத கவலையிலே மிததக்கிறான்ஒருநாள்

உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்கிறான்அப்படி (இறந்த)

 

இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்

இன்பத்திலே சில நாள் துன்பத்திலே சில நாள்

அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்

கண்ணீர் சிந்திடவே கடைசி வழி ஒரு நாள்அப்படி  (இறந்த)

  --கவிஞர் ஆலங்குடி சோமு, படம் : இரவும் பகலும், 1965.