2. பொருநராற்றுப்படை
- கரிகால்பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார்
பாடியது .
பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 1
பாலை யாழ்
ஆறலை கள்வர்
படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும்
மருவுஇன் பாலை
முடத்தாமக்கண்ணியார்.
பொருந. 2 : 21 – 22
பாலைநில வழியே
செல்பவரை அலைத்துப் பொருள் பறிக்கு கொடுமையான ஆறலை கள்வர்கூட .தம் கைகளில் உள்ள கொடிய
படைக்கலங்களைப் போட்டுவிட்டு அடங்கி நிற்கும்படியன (இனிமை) பண்பு நிறைந்தது பாலை யாழ்.
இசை – கேட்போர்
உள்ளத்தே இன்பம் விளைத்தலோடு உள்ளத்தைப் பண்படுத்தும் ஆற்றல் உடையதும் என்பதாம். ..தொடரும் ….. 15/1/16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக