சனி, 30 ஜனவரி, 2016

நள்ளி -9

நள்ளி
…………………… கரவாது
நட்டோர் உவப்ப நடைப்பரி காரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும் ………
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 103 – 107
                       தன்மனத்து நிகழ்கின்றவற்றை மறைக்காது கூறித் தன்னை நாடி வந்தவர் மனம் மகிழ – அவர் இல்லத்திற்கு இயன்ற பொருள்களைக் குறிப்பறிந்து வழங்குபவனும்  மழை வளமிக்க நெடிய குவடுகளை உடைய மலை நாட்டை உடையவனும் போர்த் தொழில் வல்லவனும் ஆகிய நள்ளி என்னும் வள்ளலும்…..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக