புதன், 13 ஜனவரி, 2016

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
                செஞ்ஞாயிற்றுச் செலவினை அன்றே அளந்தறிந்த தமிழன் உயிர்கள் உறையும் உலகிற்கு ஆதிபகலன் ஆகிய சூரியனே காரணன் எனக் கண்டறிந்தான்.
                          ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இயற்கையின் முதற்பொருளாகிய ஒளியை இறைவழிபாடாகக் கொண்டு,  படைப்பு இயற்கையின் கொடை என்றறிந்து,  படைக்கப்படும் பொருள் யாவும் தென்னை, வாழை, கரும்பு, நெல், அரிசி, இஞ்சி, மஞ்சள், பூ, புல்,  காய், கனி, கதிர் என இயற்கைப் பொருளாய் விளங்க,   கூடி உழைத்துக் கொண்டாடி மகிழ ஊரும் மக்களும் ஆடும் மாடும் கன்றும் கழனியும் மரமும் செடியும்  கொடியும் புல்லும் பூண்டும் பூவும் காயும் கனியும் உறவுகளாய் அமைய  நலமாய் வளமாய் வாழ  அருளும் ஞாயிறு போற்றும் நாளிது…
                           உலகம் உவந்து போற்றும் தமிழனின் இறைவழிபாட்டை இன்று பெற்றனம். இனிதே பொங்கலிட்டு எங்கும் நிறைந்த இறை ஆற்றலைத் தொழுதேத்தினோம் ; ஏற்றருள் புரிந்து என்றும் துணை நிற்க இறைஞ்சினோம் இறைவா…!
                                உலகை வலம்வந்து உயிர்களை வாழவைப்பாயாக.. !
அறுவடைத் திங்களை ஆண்டின் தொடக்கமாகக்கொண்டு எல்லாம் வல்ல முழுமுதற்பொருளாம் சூரியனுக்கு நன்றி பாராட்டும் நன்னாளின்று -  வாழ்த்துவோம் வளம்பெறுவோம்; மகிழ்வோம் மகிழ்விப்போம்  எல்லாவற்றையும் ஏற்றுப் போற்றும் இடமகன்ற உயர்ந்த இடத்தில் இருக்கும் இளங்கதிர்ச் செல்வனே உன்னை வணங்கி மகிழ்கின்றோம்.
எழுந்து வா இளங்கதிரே…. ! இன்று புதிதாய்ப் பிறந்தோம் – புத்தாடை உடுத்தி, புதுப்பானைப் பொங்கலிட்டு உண்ணும் உணவில் ஒன்றுபட்டோம்  உணரும் தமிழ்உறவில் ஒன்றுபட்டு நிற்போம் .. வழிபடுவோம் வல்லமை பெறுவோம்.


என் இனிய முகநூல், வலைப்பூ நண்பர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக