செவ்வாய், 26 ஜனவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 5

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 5
பாரி
 …………………………… சுரும்பு உண
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும் ……
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 8 7– 91
                     சுரும்புகள் உண்ணும்படி தேன் வழங்கும் சுரபுன்னை மரங்கள் நிறைந்த நெடிய வழியின்கண் – தனது தேரைத் தடுத்த முல்லைக்கொடி – அதனை விரும்பியதாகக் கருதி அதற்குத் தனது பெரிய தேரை அளித்தவனும் வெள்ளிய அருவி வீழும் பறம்பு மலைக்கு அரசனுமாகிய பாரி என்னும் வள்ளலும்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக