திங்கள், 25 ஜனவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 4 ஏழு வள்ளல்கள் இதன்கண் – பேகன் முதலிய ஏழு வள்ளல்களின் ஈகைத் தன்மையை எடுத்துக்கூறி – இந்நாள் அவர்தம் ஈகைத்தன்மையை நல்லியக்கோடன் ஒருவனே தாங்குகின்றான் என அவனைப் புகழ்ந்துரைக்கின்றார். பேகன் வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகனும் ….. இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 8 4 – 87 பருவமழை பொய்யாது பெய்தலால் வளமிக்க மலைப்பக்கத்துக் காட்டில் திரிந்த மயில் அகவியதனைக் கேட்டு – அது குளிரால் நடுங்கி அகவியது எனக் கருதி இரக்கமுற்றுத் தனது போர்வையைக் கொடுத்த வலிகெழுமிய வடிவமுடைய ஆவியர் குடியில் தோன்றிய பெருந்தகையாகிய பெரிய மலை நாட்டை உடைய பேகன் என்னும் வள்ளல்.

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 4

ஏழு வள்ளல்கள்
இதன்கண் – பேகன் முதலிய ஏழு வள்ளல்களின் ஈகைத் தன்மையை எடுத்துக்கூறி – இந்நாள் அவர்தம் ஈகைத்தன்மையை நல்லியக்கோடன் ஒருவனே தாங்குகின்றான் என அவனைப் புகழ்ந்துரைக்கின்றார்.
 பேகன்
வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் …..
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 8 4 – 87
                        பருவமழை பொய்யாது பெய்தலால் வளமிக்க மலைப்பக்கத்துக் காட்டில் திரிந்த மயில் அகவியதனைக் கேட்டு – அது குளிரால் நடுங்கி அகவியது எனக் கருதி இரக்கமுற்றுத் தனது போர்வையைக் கொடுத்த வலிகெழுமிய வடிவமுடைய ஆவியர் குடியில் தோன்றிய பெருந்தகையாகிய பெரிய மலை நாட்டை உடைய பேகன் என்னும் வள்ளல். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக