சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 2
இமயத்தில் வில்
பொறித்த….
குடபுலம் காவலர்
மருமான் ஒன்னார்
வடபுல இமயத்து
வாங்குவிற் பொறித்த
எழிஉறழ் திணிதோள்
இயல்தேர்க் குட்டுவன்
இடைக்கழிநாட்டு
நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 47 – 49
இயற்கை வளம்
செறிந்த மேற்றிசைக்கண் உள்ள சேர நாட்டின் அரசர்
குடியில் பிறந்தவனும் கணைய மரத்தை ஒத்த திண்ணிய தோளையுடையவனும் குட்ட நாட்டிற்குத்
தலைவனுமாகிய மன்னன்…
சேரர் ஆணை இமயம்
வரை சென்றமையை –
( மருமான்
– மரபில் தோன்றியவன் ; ஒன்னார் – பகைவர் ; வாங்குவில் – வளைந்த வில் – இலச்சினை ; வருபுனல் – ஆற்று நீர்.)
வடதிசை எல்லை
இமயமாகத்
தென்னங் குமரியோடு
ஆயிடை அரசர்
முரசுடைப் பெருஞ்சமந்
ததைய ஆர்ப்பெழ
………………………….
குட்டுவ. என்கிறது பதிற்றுப்பத்து.
குமரியொடு வட
விமயத்து
ஒருமொழிவைத்
துலகாண்ட
சேரலாதன்
……. என்கிறது சிலப்பதிகாரம்… தொடரும்………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக