ஞாயிறு, 17 ஜனவரி, 2016

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 4

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 4
கரிகால்வளவன்
….. …… ….. வென்வேல்
உருவப் பல்தேர் இளையோன் சிறுவன்
முருகற் சீற்றத்து உருகெழு குரிசில்
தாய்வயிற் றிருந்து தாயம் எய்தி
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப
பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி
வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு
பிறந்துதவழ் கற்றதன் தொட்டு சிறந்தநன்
நாடுசெகிற் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப
முடத்தாமக்கண்ணியார். பொருந. 2 : 129  – 141
கரிகால்வளவன் – பகைவரை வென்ற வேலினையும் அழகினையும் அச்சம் விளைவிக்கும் பல தேர்களையும் உடைய( உருவப்பஃறேர்) இளஞ்சேட் சென்னியின் மைந்தன் ; முருகக்கடவுளின் சீற்றத்தையும் கண்டார் அஞ்சும் தோற்றப் பொலிவினையும் உடைய சிறந்த தலைவன் ; அவன் தன் தாயின் கருவில்  இருந்தபோதே அரசுரிமையைப் பெற்றான் ; தன் வலியறியாத  பகைவர் பின்னர்த் தன் வலியை அறிந்து ஏவின தொழிலைச் செய்யவும் அங்ஙனம் அறிந்து செய்யாத பகைவரது நாடு மனக்கவலை அடையவும் ; கடலின் மீதே தன் சுடர்களைப் பரப்பித் தோன்றிப் பின்னர் மெல்ல விண்ணிடத்தே  ஞாயிறு சென்றாற் போன்று ; பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கிச் சிறந்த நல்ல நாட்டைத் தன் தோளிலே சுமந்தவன் ….
( உருவம் – அழகு ; பவ்வம் – கடல் ; குரிசில் – தலைவன்.)  ..தொடரும்……….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக