3. சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி
ஆசிரியர் : இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
சிறுபாணாற்றுப்படை
– ஒய்மாட்டு நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்று மீளும் சிறுபாணன் ஒருவன் வழியில்கண்ட வறுமையுற்ற பாணன் ஒருவனை ஆற்றுப்படுத்தும் முறையில்
அமைந்துள்ளது.
சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 1
நட்ட பாடை - பண்
பொன்வார்ந்
தன்ன புரிஅடங்கு நரம்பின்
இன்குரல் சீறியாழ்
இடவயின் தழீஇ
நைவளம் பழுநிய
நயம் தெரி பாலை
கைவல் பாண்மகன்
கடன் அறிந்து இயக்க
இடைக்கழிநாட்டு
நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 34 - 37
பொற்கம்பியையொத்த
முறுக்கு அடங்கின நரம்பினது இனிய ஓசையையுடைய
சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி நட்டபாடை
என்னும் பண்ணைப் பாலை யாழில் இசைக்கவல்ல பாணன் முறைமை அறிந்து இசைக்க…
( சீறியாழ்
– சிறிய யாழ் ; நைவளம் – நட்டபாடை என்னும் பண் ; பழுநிய – முற்றுப்பெற்ற ; கடனறிந்து
– முறைமையறிந்து.) ..தொடரும்….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக