திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி –
5
ஆறுமுகத்தான்
ஆற்றும் செயல்கள்
மாயிருள்
ஞாலம் மறுவின்றி விளங்க
பல்கதிர்
விரிந்தன்று ஒருமுகம் ; ஒருமுகம்
ஆர்வலர்
ஏத்த அமர்ந்தினிது ஒழுகி
காதலின்
உவந்துவரம் கொடுத்தன்றே ஒருமுகம்
மந்திர
விதியின் மரபுளி வழாஅ
அந்தணர்
வேள்வி ஓர்க்குமே ஒருமுகம்
எஞ்சிய
பொருள்களை ஏமுற நாடி
திங்கள்
போலத்திசை விளக்கும்மே ஒருமுகம்
செறுநர்த்
தேய்த்துச் செல்சமம் முருக்கி
கறுவுகொள்
நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒருமுகம்
குறவர்
மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல்
வள்ளியொடு நகைஅமர்ந் தன்றே
ஆங்கு
அம்மூஇரு முகனும் முறை நவின்று …..
நக்கீரர். திருமுரு.
1: 91 – 103
ஆறுமுகங்கள் ஆற்றும் அருட் செயல்கள்
பல
சுடர்களைத் தோன்றச் செய்தது – ஒரு முகம்
வேண்டும்
வரமளிக்கும் – ஒரு முகம்
அந்தணர்
வேள்விகளைக் காக்கும் – ஒரு முகம்
வேத
நூல்கள் காட்டாத எஞ்சிய பொருள்களைக் கூறும் – ஒரு முகம்
மறக்கள
வேள்வியை விரும்பி நிற்கும் – ஒரு முகம்
வள்ளியம்மையுடன்
மகிழ்ந்திருக்கும் – ஒரு முகம்
பன்னிரு கைகள்- ஆற்றும் அருஞ்செயல்களை நூலில் கண்டு
கொள்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக