திருமுருகாற்றுப்படை
– அரிய செய்தி - 4
1. திருச்சீரலைவாய் – திருச்செந்தூர்
யானை வாகனம்
வைந்நுதி
பொருத வடுஆழ் வரிநுதல்
வாடா
மாலை ஓடையொடு துயல்வர
படுமணி
இரட்டும் மருங்கின் கடுநடை
கூற்றத்
தன்ன மாற்றுஅரு மொய்ம்பின்
கால்கிளர்ந்
தன்ன வேழம் மேல்கொண்டு
நக்கீரர். திருமுரு.
1: 78 – 83
கூரிய
அங்குசத்தால் குத்தப்பெற்ற தழும்புகள் நிறைந்த செம்புள்ளிகள் மிக்குடைய மத்தகத்தில்
– பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய – தாழ்ந்து தொங்கும் மணிகள் மாறி மாறி
ஒலிக்கின்ற பக்கங்களையும் – விரைவான நடையினையும்
– கூற்றுவனை ஒத்த வலிமையினையும் – ஓடும்போது காற்று எழுந்து செல்வது போன்ற வேகத்தையும்
உடைய யானையின் மீதேறி – முருகன் வருகின்றான். ( முருகன் யானைக் கொடி உடையோனை வென்று
அடக்கியதால் யானை ஊர்தியாகி இருக்கலாம்.- ஆய்க)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக