ஞாயிறு, 24 ஜனவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 3

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 3
தமிழ் நிலைபெற்ற மதுரை
தத்துநீர் வரைப்பின் கொற்கைக் கோமான்
தென்புலம் காவலர் மருமான் ஒன்னார்
மண்மாறு கொண்ட மாலை வெண்குடை
கண்ணார் கண்ணி கடுந்தேர்ச் செழியன்
தமிழ் நிலைபெற்ற தங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை…………..
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 62  – 67

கொற்கை நகருக்கு வேந்தனும் தெற்கில் உள்ள பாண்டி நாடு முழுமையும் காவல் செய்யும் பாண்டியர் மரபில் தோன்றியவனும் கண்ணி உடையானும் விரைந்து செல்லும் தேரினை உடையானும் ஆகிய செழியனின் தலைநகராகிய – தமிழ் வீற்றிருந்த மனமகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருக்கள் கொண்ட மதுரை ……
முச்சங்கங்கள் நிறுவித் தமிழாய்ந்த பெருமையும் நிலந்தருதிருவிற் பாண்டியன் முதலான மன்னர்கள் அச்சங்கங்களின் வளர்ச்சிக்கு ஆவன செய்து செந்தமிழை வளர்த்தமையானும் தமிழ் வளம்பெற்று அழியாது நிலவுவதற்கு இடமாக அமைந்த மதுரை.
( தத்துநீர் வரைப்பின் கொற்கை – கொற்கைத் துறைமுகப் பட்டினம்)

மதுரை – “ முத்தும் முத்தமிழும் தந்து முற்றுமே “ – கம்பன். ..தொடரும்….. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக