செவ்வாய், 5 ஜனவரி, 2016

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 6

3.திருஆவினன்குடி – பழனி / பொதினி.
திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 6
முனிவர் – தோற்றப் பொலிவு
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்
பலஉடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனிஇல் காட்சி முனிவர் …….
நக்கீரர். திருமுரு. 1: 126 – 137
மரவுரியையை உடுத்தவர் ; வலம்புரிச் சங்கை ஒத்த அழகிய நரைமுடியை உடையவர் ; அழுக்கின்றி விளங்கும் திருமேனியை உடையவர் ; மானின் தோலைப் போர்த்தவர் ; சதை வற்றிய மார்பில் விலா எலும்பிகள் தோன்றியசையும் உடலை உடையவர் ; பல பகற்பொழுதுகள் உண்ணும் உணவை நீக்கியவர் ; பகையைப் போக்கிய மனதை உடையவர் ; கற்றறிந்தவர்க்கும் தாம் எல்லையாகிய தலைமைத் தன்மை உடையவர் ; ஆசையையும் கடுங்கோபத்தையும் நீக்கிய அறிவுடையவர் ; எவரிடத்தும் வெறுப்பு இல்லாத மெய்ஞ்ஞானத்தை உடையவர்  ஆகிய  இவ்வியல்பகளை உடைய முனிவர்கள்.

( சீரை – மரவுரி ; சீர் – அழகு ; உரிவை – தோல் ; இகல்  மாறுபாடு ; செற்றம் – பகைமைக் குணம் ; துனி – வெறுப்பு.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக