வெள்ளி, 15 ஜனவரி, 2016

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 2

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 2
 பரிசு பெற்றோன் பெறாதோனை விளித்தல்
பீடுகெழு திருவின் பெரும்பெயர் நோன்தாள்
முரசுமுழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல
பாடல் பற்றிய பயனுடை எழாஅல்
கோடியர் தலைவ கொண்டது அறிந
முடத்தாமக்கண்ணியார். பொருந. 2 : 53  – 57
பெருமைமிக்க செல்வத்தினையும் பெரும் பெயரையும் வலிய முயற்சியினையும் வெற்றி முரசு முழங்கும் படையினையும் கொண்ட சேர சோழ பாண்டியர்கள் தம்மிற் பகைமை நீங்கி ஒருங்கே அரசு வீற்றிருக்கும் தோற்றம் பெருஞ் சிறப்பை நல்குவதாகும். அதுபோல் கூத்தர்களுக்குத் தலைவனே ! நீ மிடற்றுப் பாடலைப் பாடுதலில் வல்லமை உடையாய் ! யாழ் இசைப்பதில் வல்லமை உடையாய் ! அந்த இருவகைப்பட்ட இசைக்கும் ஒப்பக் கூத்து ஆடவும் நீ வல்லாய் ! பாட்டிசையும் யாழிசையும் கூத்தாட்டும் தம்முள் ஒத்து உன்னிடம் இருக்கும் காட்சி – அந்த மூவேந்தரும் ஒருங்கே இருக்கும் காட்சியை ஒத்த இன்பம் தருகின்றது.
( பீடு – பெருமை ; பெரும்பெயர் – உலகறிந்த புகழ் ; தாள் – முயற்சி.) ..தொடரும்……….        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக