புதன், 6 ஜனவரி, 2016

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 7

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 7
பாடும் ஆடவர் – தோற்றப் பொலிவு
புகைமுகந் தன்ன மாசுஇல் தூஉடை
முகைவாய் அவிழ்ந்த நகைசூழ் ஆகத்து
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்
நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேலவர் இன்நரம்பு உளர
நக்கீரர். திருமுரு. 1: 138 – 142
பாலாவியன்ன நுண்ணிய ஆடை அணிந்தவர் ; மொட்டலர்ந்த மாலை சூழ்ந்த மார்பினை உடையவர் ; தமது எஃகுச் செவியால் இசையை அளந்து பண்ணுறுத்திய வார்க்கட்டினையுடைய யாழின் இசையிலே பயின்று பயின்று நன்மையுடைத்தாகிய மனம் கொண்டவர் ; எக்காலமும் இனிய மென்மொழியே பேசும் இயல்பினர் ஆகிய பாடுநர் இனிய யாழ் நரம்பினை இயக்க …
( ஆகம் – மார்பு ; எஃகு – கூர்மை ; யாழோர் – யாழ்ப்பாணர்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக