பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 8
காவிரியில்
கல்லணை….
தானிலை திரியாத்
தண்டமிழ்ப் பாவை
---- மணிமேகலை. பதிகம்
: 24 – 25
வாழியவன்றன்
வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி
ஊழி
யுய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவிரி
ஊழி
யுய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும்
ஆழி
யாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி
----- சிலப்பதிகாரம் . கானல்வரி : 27
காவிரிப்
புரப்பதற்குக் காரணம் கரிகால்வளவனின் செங்கோலே எனச் சிறப்பித்தார் இளங்கோவடிகள் –
“ கரிகால்வளவன் ஈழத்தினின்று பன்னீராயிரம் மக்களைச்
சிறை பிடித்துக்கொணர்ந்து காவிரிக்குக் கரை கட்டுவித்தான். இராசேந்திரச் சோழன் சோழகங்கம்
என்னும் ஏரியை வெட்டினான். ‘முடிகொண்டான்’ ஆறும் இவனால் வெட்டப்பட்டது போலும் ! காவிரிக்
கல்லணை கி.பி. 1068இல் வீரராசேந்திரனால் வெட்டப்பட்டதாகத் தெரிகின்றது. “ – பாவாணர்.
மேற்சுட்டிய
சான்றுகளாலும் காவிரியில் கல்லணை இருந்ததென்றும் அதனைக் கட்டியவன் கரிகாலன் என்பதும்
தெற்றென விளங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக