திருமுருகாற்றுப்படை
– அரிய செய்தி - 8
பாடும் மகளிர்
– தோற்றப் பொலிவு
நோயின்று
இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர்
புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை
கடுக்கும் திதலையர் இன்நகைப்
பருமம்
தாங்கிய பனிந்துஏந்து அல்குல்
மாசுஇல்
மகளிரொடு மறுவின்றி விளங்க
நக்கீரர். திருமுரு.
1: 143 – 147
நோயில்லாது
இயன்ற நல்ல உடம்பினை உடையவர் ; மாந்தளிரை ஒத்த நிறத்தை உடையவர் ; பொன்னுரை போன்று மிளிரும்
தேமலை உடையவர் ; நல்ல ஒளிமிக்க மேகலையை அணிந்த அல்குலை உடையவர் ஆகிய பாடினியர் இனிய யாழை மீட்டிப் பாடிக்கொண்டே
செல்ல ……
(
பருமம் – மேகலை வகை ; அவிர்தல் – விளங்குதல் ; திதலை – தேமல்.)
முருகனின் தந்தை – சிவன்..?
முருகப்
பெருமானை இடையறாமல் நினைக்கும் முனிவர்கள் முன்னே செல்ல – அவர்களைப்பின்பற்றிக் கந்தருவரும்
அவர்தம் மகளிரும் இனிய யாழை மீட்டிப் பாடிக்கொண்டே பின்னால்வர – அவர்களுக்குப் பின்னால்
திருமால் சிவபெருமான் இந்திரன் ஆகிய தேவர்கள் தொடர்ந்து செல்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக