4.திருஏரகம்
அந்தணர் என்போர்…!
இருமூன்று
எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச்
சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு
இரட்டி இளமைநல் யாண்டு
ஆறினில்
கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக்
குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப்
பாளர் பொழுதறிந்து நுவல
நக்கீரர். திருமுரு. 1: 177 – 182
ஓதல்
முதலிய அறுவகைத் தொழில்களைச் செய்தலிலே வழுவாமல் – உலகத்தார் மதிக்கின்ற பல்வேறு பழங்குடிப்
பிரப்பினராய் – நாற்பத்தெட்டு வருடங்கள் நல்ல இளமைக் காலம் முழுவதும் வேதம் கூறும்வழியில்
பிரமசரியத்தைக் கைக்கொண்டு கழித்தவர்களும் -
அதன்பின் இல்லற வாழ்க்கையில் பயின்ற கோட்பாட்டினை உடையவர்களும் – மூன்று வித
வடிவுடைய குண்டத்தில் மூன்று வகைத் தீயால் உண்டாகிய செல்வத்தையும் - இரு பிறப்பினையும் உடைய அந்தணர்கள் தாங்கள் வழிபட
வேண்டிய முக்காலமும் அறிந்து பூணூலையும் புலராத ஆடையையும் அணிந்து கொண்டு தலைமேல் குவித்த
கையினராய் முருகப் பெருமானைப் புகழ்ந்து துதித்து – சரவணபவ என்னும் வேத மந்திரத்தை
நாவால் பலமுறை ஒலித்து வழிபட…
திருவேரகம் – இதனை “மலை
நாட்டகத்தொரு திருப்பதி “ என்றார் நச்சினார்க்கினியர். அருணகிரியார் சோழ நாட்டிலுள்ள
“சுவாமிமலை” என்னும் தலமே “ஏரகம் “ என்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக