வியாழன், 30 ஜூன், 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் - 5

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் - 5
மக்கள்தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
                                     -தொல். 3: 9: 577
முப்பத்திரண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறிவொடு புணர்ந்த ஆடூஉ, மகடூஉ மக்கள் எனப்படும். அவ்வாறு உணர்விலும் குறைவுபட்டாரைக் குறைந்தவகை அறிந்து முற்கூறிய சூத்திரங்களானே அவ்வப் பிறப்பினுள் சேர்த்திக் கொள்ளவைத்தான் என்பது அவை ஊமும் செவிடும் குருடும் போல்வன. கிளையெனப்படுவார் தேவரும் தானவரும் முதலாயினார் பிறப்பு என்றதனால் குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன எனப்படும் மன உணர்வு உடையன உளவாயின் அவையும் ஈண்டு ஆறறிவுயிராய் அடங்கும் என்பது தாமே எனப் பிரித்துக் கூறினைமையான் நல்லறிவுடையார் என்றற்குச் சிறந்தார் என்பதும் கொள்க.(பேராசிரியர் , உரை)
ஒருசார் விலங்கும் உளவென மொழிப.  – தொல்.3: 9: 578
விலங்கினுள் ஒரு சாரனவும் ஆறறிவுயிராமென்றவாறு ; அவையாவன கிளியுங் குரங்கும் யானையும் முதலாயின. ( இளம்பூரணர், உரை)
                         கிளி, குரங்கு, யானை –ஆறறிவு உடையன எனத் தொல்காப்பியர் வழிநின்று கண்டுபிடித்ததோடு  அம்மூன்றோடு முதலாயின என்றும் கூறுவதன் நோக்கம் யாதெனின் தம் காலத்திற்குப் பின்னே அறிவியல் அறிஞர்கள் வேறு சில விலங்குகளையும் ஆறறிவு உடையன என்று கண்டுபிடிக்கலாமல்லவா..?
                   

 “The ancient Tamils had as profound an understanding of animals and birds as of humans.
Tolkappiyam, in its Marapiyal speaks of the  classifications of all living beings into six groups.

It is the human beings that have six senses;
There are others also of the same class of birth
Tolkappiyam, 1524
In addition to stating that there are other organisms that have six senses like human beings, Tolkappiyar significantly adds,
They say there are animals that have six senses
Tolkappiyam, 1525
While interpreting the  last Nurpa, Ilampuranar observes that besides men and women, there are  other beings like  parrots, monkeys and elephants which are also endowed with six senses.” (Prof. P. Marudanayagam)
parrots, monkeys and elephants which are also endowed with six senses.”
ஈண்டுத் தொல்காப்பியரின் அறிவியல் அறிவும் ; அவர் வரையறுத்த ஆறறிவுக் கோட்பாடும் அக்கோட்பாட்டிற்கு உரைவகுத்த உரையாசிரியர்களின் அறிவியல் அறிவுத் திறனும் போற்றுதற்குரியதன்றோ..!
  தொல்காப்பியரின் கருத்து  அறிவியல் உண்மையெனின்  அதற்குச் சான்று வேண்டுமே….   தொடரும் …………… 

புதன், 29 ஜூன், 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் - 4

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் - 4
Anger kills.  .. தன்னையே கொல்லும் சினம். 3
Causes
அதிகாரம்-4, அறன் வலியுறுத்தல்
CHAPTER – 4, ITERATION OF VIRTUE’S WORTH
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. குறள். 34
ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது, மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.
To be quite free from mental blots is all that’s righteousness
And all the rest of acts without  such freedom are but fuss.
                                                                 (Tr.)  K.M.Balasubramaniam
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். குறள். 35
பொறாமையும், ஆசையும், சினமும், கடுஞ்சொல்லும் இந்நான்கையும் விலக்கி நடத்தலே அறமாம்.
That life alone is virtue which doth eschew these as ill
The passions four like envy, greed and wrath and words evil.
                                                                        ( Tr.)  K.M.Balasubramaniam
We may find the main cause for the disorder / malfunction in a human body. According to Thiruvalluvar, one should rest one’s mind in peace; If one fails to do so , it is bound to  affect the  inner organs of the body.  As advised by Thiruvalluvar one should adopt a four-fold path; 1.Envy, 2.Greed, 3.Anger,  4. Harmful words. Envy lead to Greed, envy and greed lead to anger;  envy, greed and anger lead to outbursts of fury. This will lead to mental agony, hypertension, reddish eyes , increasing heart beats, giddiness, resulting in death.  

செவ்வாய், 28 ஜூன், 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் -3

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் -3
Anger kills.  ….. தன்னையே கொல்லும் சினம். - 2
CHAPTER – 31,  THE AVOIDANCE OF ANGER
The wrath which is the killer of the men it doth embrace
Will burn their kinsmen too who are of raft-like helpful ways.
                                                                 ( Tr.) K.M.Balasubramaniam
தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். குறள்.305
If thou wouldst fain protect thyself, do guard against thy spleen
If thou guardest not, thy own anger will destroy thee clean.
                                                                ( Tr.)  K.M.Balasubramaniam
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. குறள். 304
Because one’s anger slayeth one’s laughter and one’s cheer
Is  there a greater foe for one than one’s wrath to fear
                                                                   ( Tr.)  K.M.Balasubramaniam
உள்ளியது எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். குறள்.309
If he could but from whate’er thought of anger e’er refrain
The wishes all of his own heart will he at once attain.
                                                                  ( Tr.) K.M.Balasubramaniam

The above couplets offer general guidance to save life. As the ……. goes,  prevention are better than cure.

We may find the main cause for the disorder / malfunction in a human body. According to Thiruvalluvar, one should rest one’s mind in peace; If one fails to do so , it is bound to  affect the  inner organs of the body.  As advised by Thiruvalluvar one should adopt a four-fold path; 1.Envy, 2.Greed, 3.Anger,  4. Harmful words. Envy lead to Greed, envy and greed lead to anger;  envy, greed and anger lead to outbursts of fury. This will lead to mental agony, hypertension, reddish eyes , increasing heart beats, giddiness, resulting in death.
The above couplets offer general guidance to save life. As the ……. goes,  prevention are better than cure.
 மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் … (457) என்று  உளவியல் ஆய்வுக் கோட்பாட்டை  உலகிற்கு அறிமுகப்படுத்திய  முதல் அறிஞர் திருவள்ளுவரே. மருத்துவ அறிவியல் துறையில் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டுக்கு(1856 – 1939) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உளவியல் பகுப்பாய்வின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் திருவள்ளுவர் . 

திங்கள், 27 ஜூன், 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் -2

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் -2
Anger kills.  ….. தன்னையே கொல்லும் சினம்.
 “Angry people at increased risk of heart attacks–TOI- 5-3-14
London: Scientists have confirmed that hot-headed people with outbursts of anger are more prone to heart attacks, strokes and other cardiovascular problems in the two hours immediately afterwards. Five episodes of  anger a day would result in around 158 extra heart attacks per 10,000 people with a low cardiovascular  risk per year, increasing to about 657 extra heart  attacks per 10,000 among those with a high cardiovascular risk.
The Harvard School of Public  Health Researchers say ……………….
 “ This research found that people’s risk of heart attack and stroke increased for a short time after they lost their temper. It’s not clear what causes this effect. It may be linked to the physiological changes that anger causes to our bodies, but more research is needed to explore the biology behind this.”
HOMOEOPATHY PHYLOSOPHY
Constitution of the patient, his mind and temperament, occupation, mode of living and habits, social and domestic relations, age and sexual functions etc. give us individuality of the patient.( The Organon)
MIND: the ability to be aware of things and to think and reason, originating in the brain.
TEMPERAMENT: a person’s nature as it controls the way he or she behaves, feels, and thinks.
Thiruvalluvar proclaims ….. Anger kills.  Quite a few Thirukkurals amplify how anger affects  one’s mind and body and even prones fatal.



அதிகாரம் – 31, வெகுளாமை
சினமென்னும்  சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். குறள்.306
சினம் என்னும் நெருப்பு சேர்ந்தாரைக் கொல்வதோடு அவருக்கு நட்பாக நின்று புணைபோலப் பயன்படுவாரையும் சுட்டெரித்துப் பிரித்துவிடும்.
இக்குறட்பாவை, அறிவியல் உலகம் திருவள்ளுவரின் அரிய கண்டுபிடிப்பாக ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
                            …….தொடரும் 

ஞாயிறு, 26 ஜூன், 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் -1

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் -1
 What is Science …? அறிவியல் என்றால் என்ன… ?
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
         மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355
எந்த ஒரு பொருள்,  எவ்வியல்பு உடையதாயினும் அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிவதே அறிவாம்.
 இயற்கை அறிவியலை ஆழமாக ஆராய்ந்த சான்றோர்களில் தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் முன்னோடிகளாகத் திகழ்கின்றனர்.
“ Science – a branch of knowledge requiring systematic study and method – especially one of those dealing with substances ……..” – animal and vegetable life and natural laws……..”
பொருள்களின் இருப்பையும் இயல்பையும் அறிவதே அறிவியல்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355
 “Whatever be the apparent diversity of things, it is wisdom,
To analyses and perceive the basic truth of  the matter.
The enlightened man who has true understanding, will be able to uncover the differing exteriors and lay bare the one central and immanent substance of all things of this world. Emerson’s concept of the ‘over soul’ based on the Upanishadic belief in cosmic unity conforms to Valluvar’s philosophy. And T.S. Eliot’s line, “ All things affirm thee in living”. Also echoes the same idea.
         Valluvar does not believe in the mere acceptance of things only on the basis of tradition or sanctity. He wants the core of ultimate truth to be arrived at, by going right behind appearances with vigorous use of reason.” (Tr.)  Dr.S.M. Diaz.
In the same way, our great ancient Tamil poets analyzed each and everything in a scientific manner.
இக்குறள், அறிவியல் என்பதற்கு இலக்கணம் கூறுகிறது ; இப்பொழுது புரிகிறதா திருவள்ளுவரின் அறிவியல் அறிவாற்றல். வள்ளுவர் வகுத்தளித்துள்ள இவ்விலக்கணத்தை அவர் அருளிய 1330 அருங்குறட்பாக்களிலும் பொருத்திப்படியுங்கள் , அறிவு வளம் பெறும்.
                               ….தொடரும் 

சனி, 25 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 26

மலைபடுகடாம் – அரிய செய்தி : 26
நன்னன் – கொடைச் சிறப்பு
இலம்படு புலவர் ஏற்ற கைந் நிறைய
கலம்பெயக் கவிழ்ந்த கழல்தொடித் தடக்கையின்
வளம் பிழைப்பு அறியாது வாய்வளம் பழுநி
கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழை சுரந்தன்ன ஈகை நல்கி
தலைநாள் விடுக்கும் பரிசில் மலைநீர்
வென்று எழு கொடியின் தோன்றும்
குன்றுசூழ் இருக்கை நாடு கிழவோனே
  பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.  576 – 583
                          புலவர் ஏற்ற கைந்நிறையும்படி பேரணிகலன்களைச் சொரிதலால், கீழ் நோக்கிக் கவிழ்ந்த, கொடுத்து உழந்த பெரிய கையிடத்து உண்டாகிய தான் கொடுத்த செல்வம், கெடுதலை அறியாதபடி, தப்பாமல் வளம் கொழிக்கும் ;  மூங்கில் வளர்ந்த நவிரம் என்னும் பெயரையுடைய மலையின் உச்சியில், விரைவாக மேகங்கள் மழையைச் சொரிந்தாற் போல, முதல் நாளிலேயே பரிசில் தந்து விடை கொடுத்து அனுப்புவான். மலை உச்சியிலிருந்து விழும் அருவிகள், வென்று உயர்த்திய, கொடிகளைப் போலத் தோன்றும், இத்தகைய மலைகள் சூழ்ந்த நாட்டிற்கு அவன் உரிமையுடையோன் ஆவன்.
                                  நன்னன் – ஆடை, உணவு, அணிகலன், தேர், யானை, குதிரை, பசு, பொருட்குவை ஆகியவற்றைக் கூத்தர்க்கும் விறலியர்க்கும்  புலவர்க்கும் அவர்தம் சுற்றத்தார்க்கும் வழங்கி  மகிழ்வான்.  கூத்தரின் தலைவனுக்குப் பொற்றாமரைப் பூவினையும், விறலியர்க்குப் பொன்னரிமாலை முதலிய அணிகலன்களையும் பரிசாக வழங்குவான்.( 561 – 575)
 ( கலிங்கம் – ஆடை ; முடுவல் – பெண்நாய் ; புகல் – விருப்பம் ; வாரி – யானை மிகுதியாக உள்ள இடம் ; பழுநி – முற்றுப்பெற்று ;இலம்பாடு – வறுமை ;  இலம்படு புலவர் – இல்லாமையால் வருந்தும் புலவர்.)
முற்றும்
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை – அரிய செய்திகள் – முற்றின.

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் -1 …… தொடரும் ……………. 

வெள்ளி, 24 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 25

மலைபடுகடாம் – அரிய செய்தி : 25
வழங்க மனமின்றி மறைந்தோர் பலர்
உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து
அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலம் என மலர்ந்த கையர் ஆகி
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடுவரை இழிதரு நீத்தம் சால் அருவிக்
கடுவரல் கலிழிக் கட்கு இல் சேயாற்று
வடுவாழ் எக்கர் மணலினும் பலரே
                       பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 550 – 556
 உயர்ந்த அரசுரிமையினையும் கொடுமையில்லாத அமைச்சர் முதலிய உரிமைச் சுற்றத்தாரையும் அகன்ற நாட்டினையும் சுருங்கிய அறிவினையும்  தம்மை நாடி இரந்து வந்தவர்க்கு, யாம் இல்லேம், எனக்கூறி, இல்லை என மறித்த கையினையும் உடையராய்த் தம் பெயரை உலகில் நிலைபெறச் செய்யாமல், தம்முடன் அழியுமாறு கெடுத்துச் சென்ற அரசர், நெடிய மலையிலிருந்து குதித்து விழும் பெருக்கு நிறைந்த அருவியின் கடிது ஓடிவரும் வெள்ளம் பெருகிவரும் கண்ணுக்கு இனிய சேயாற்றின், அறல் தொகுக்கப்பட்ட மணல் மேடுகளில் உள்ள மணலினும் பலராவர்.
(உரும்பு – கொடுமை ; தாயம் – உரிமை ; நீத்தம் – வெள்ளம் ; கலுழி – நீர்ப் பெருக்கு ; எக்கர் – மணல் மேடு. ) 

வியாழன், 23 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 24

மலைபடுகடாம் – அரிய செய்தி : 24
நன்னனைப் புகழ்தல்
இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப
இடைத் தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தென
கொடைக் கடன் இருத்த செம்மலோய் என
 வென்றிப் பல்புகழ் விறலொடு ஏத்தி
            பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 541 – 544
நன்று இது, தீது இது என ஆராயும் பெரிய கொடைஞர்கள் இறந்தார்களாக, உன்னுடைய பெயர், இக்காலத்தில், இவ்வுலகில் மட்டும் நிலைபெறாமல் உலகம் உள்ளவரை யாண்டும் நிற்கும் கொடையாகிய கடமையைச் செய்து முடித்த தலைமை உடையோய் ; வெற்றியால் உண்டாகிய பல புகழ்களை, ஐம்பொறிகளையும் தன் வயமாக்கிக் கொண்ட அவன் வெற்றியோடு புகழ்ந்து, நும் மனத்தில் தோன்றிய நும்முடைய புகழ் மொழிகளை முழுதும் கூறவும்.
( வென்றி பல் புகழ் – வெற்றியால் உண்டாகும் பல புகழ்கள் ; விறல் – புலன் களைத் தன் வயமாக்கும் வெற்றி.) 

புதன், 22 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 23

      மலைபடுகடாம் – அரிய செய்தி : 23
யானை – முத்து
…………………………… யானை
முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள்
                 பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.  518 – 519
குறைவற்ற வலிமையுடைய யானைகளின்  - முத்துக்களைக் கொண்ட தந்தங்கள். “ முத்துடை மருப்பின் மழகளிறு “ – பதிற்றுப். 32
நூறைக் கிழங்கு
நுகம் மருள் நூறை – 515 – நுகத்தடியைப் போன்ற மருட்டும் தோற்றமுடைய நூறைக் கிழங்கு.
தேன் கள்
 திருந்து அமை விளைந்த தேக்கள் தேறல் – 522 -  நல்ல மூங்கில் குழாயில் வைக்கப்பட்ட முற்றிய தேனால் ஆக்கிய கள்ளின் தெளிவு.
( கயம் – (கஜம்) யானை ; எண்கு – கரடி ; தீர்வை – கீரி ; உழுவை – புலி ;  நூறை – நூறைக் கிழங்கு ; நாகம் – சுரபுன்னை ; ஆரம் – சந்தனம் ; அமை – மூங்கில் ; ஓரி – நீல நிறம் ; இறால் – தேனடை .) 

செவ்வாய், 21 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 22

மலைபடுகடாம் – அரிய செய்தி : 22
சேயாறு
   வனைகலந் திகிரியின் குமிழி சுழலும்
துனை செலல் தலைவாய் ஓ இறந்து வரிக்கும்
காணுநர் வயாஅம் கட்குஇன் சேயாற்றின்
யாணர் ஒருகரைக் கொண்டனிர் கழிமின்
                  பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.  474 -  477
              குயவனுடைய, வனையும் மட்கலத்தின் சக்கரம் போல, மதகுகள் வழியாகக் குமிழ்த்துச் சுழன்று, விரைந்த செலவினையுடயதாகச் சேயாறு ஒழிவின்றி ஓடிவரும், காண்பவர் விரும்பும் கண்ணுக்கினிய அச்சேயாற்றின் புதுவருவாயை உடைய ஒரு கரையை வழியாகக் கொண்டு நீங்கள் செல்வீராக.
                         சேயாறு – இந்நாளில் செய்யாறு என வழங்கப்படுகிறது.  ஆற்று நீர் வாய்த்தலை வழியாகக் குமிழ்த்து வரும் தோற்றம் குறிக்கப்பட்டுள்ளது. காண்க – காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை – ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே….  ( சிலம்பு. 10: 108 கல்லணைக் குறிப்பு.)
( துனை – விரைவு ; தலை – வாய்த்தலை / மதகு ; வரிக்கும் – ஓடும் ; வயாஅம் – விரும்பும் ; யாணர் – புதுவருவாய்.) 

திங்கள், 20 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 21

மலைபடுகடாம் – அரிய செய்தி : 21
நன்னன் -  நாடு
ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த
விலங்கல் அன்ன போர்முதல் தொலைஇ
வளஞ்செய் வினைஞர் வல்சி நல்க
துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல்
இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள் தொறும் பெறுகுவீர்
   பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.  460 - 464
ஞெண்டுகள் ஆடித் திரியும், வயல்களுக்கு அருகில் உள்ள மேட்டு நிலத்தில் அமைக்கப்பட்ட மலையைப் போன்ற நெற்போர்களை அடிமுதல் அழித்துக் கடா விட்டு, வளமையை உண்டாக்கும் உழவர், வலையர் மகளிர்க்கு நெல்லை முகந்து தருவர். அம்மகளிர், களிப்பு மிகுதியால் அசைகின்ற மிடாவிலிருந்து வார்த்த, பசிய முளையால் ஆக்கிய கள்ளின் தெளிவை ஞாயிற்றின் இளங்கதிர்  பரவும் காலத்தில் களங்கள்தோறும் நீவிர் பெறுகுவீர்.
( தசும்பு – கள் குடம் ; வாக்கிய – ஊற்றிய ; களமர் – உழவர்;  தேறல் – கள்ளின் தெளிவு.)

ஞாயிறு, 19 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 20

மலைபடுகடாம் – அரிய செய்தி : 20
இனிய உணவு
புளிக் கூழ் :- 
 செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன
வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த
கவல்விளை நெல்லின் அவரை அம்புளிங்கூழ்
அற்கு இடைஉழந்த நும் வருத்தம் வீட …434 - 437
                   சிவந்த பூக்களையுடைய வேங்கைப்பூவினைப் போன்ற நிறத்தையுடைய அவரை விதை, மூங்கிலரிசி, நெல்லரிசி ஆகியவற்றைப் புளி கரைத்த உலையில் பெய்து ஆக்கிய புளியங் கூழினை நும் வழிநடை வருத்தம் தீரப் பெறுவீர்.
நெய்ச் சோறு : -
பொன் அறைந்தன்ன நுண்நேர் அரிசி
வெண் எறிந்து இயற்றிய  மாக்கண் அமலை
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவீர்… 440 – 443
                          பொன்னை நறுக்கினார் போன்ற நுண்ணிய சீரான அரிசியை, வெள்ளை நிறமுடையதாக ஆக்கிய  கறித்துண்டுகளைக் கலந்த சோற்றை நெய் விழுதை உள்ளேயிட்டு  உண்ணும்படி பெறுகுவீர்.
தினை மாவு : -
விசையம் கொழித்த பூழி அன்ன
உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை …
           பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு.  444 – 445

                       உண்டவரை வேறு ஒன்றையும் நுகரவொட்டாமல் தடுக்கும், இடித்த நுண்ணிய  இனிய தினை மாவுடன் வெல்லத்தைப் பொடியாக்கிப் பிண்டித்த தினை மாவும் பெறுகுவீர்.
( கவல் – மேட்டு நிலம் ; அகலுள் – அகன்ற ஊர் ; குரம்பை – குடில் ; அமலை – சோற்றுத் திரள் ; இழுது – நெய் விழுது ; விசையம் – வெல்லம் ; பூழி – பொடி ; நுவணை -  இடித்த தினைமாவு .) 

சனி, 18 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 19
கண்ணி
தேம்பட மலர்ந்த மராஅ மெல் இணரும்
உம்பல் அகைத்த ஒண்முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி
திரங்கு மரல் நாரில் பொலியச் சூடி
முரம்புகண் உடைந்த நடவை தண்ணென
உண்டனிர் ஆடி கொண்டனிர் கழிமின்
   பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 428 - 433
தேனுண்டாக மலர்ந்த கடம்பின் மெல்லிய பூங்கொத்தையும், யானை முறித்த ஒள்ளிய தளிர்களையுடைய யாமரத்தின் பூவையும், உலர்ந்த மரல் நாரில், தளிர்களோடு நெருங்கக் கட்டிய – விருப்பத்தைத் தரும் கண்ணியை அழகுபெறச்சூடிப் பருக்கைக் கற்களையுடைய மேட்டு நிலத்தில்,இடம் விண்ட சிறிய வழி, மழைபெய்து குளிர்வதால், அந்நீரைக் குடித்தும், குளித்தும் வழிக்கு முகந்துகொண்டும் செல்வீராக.
( உம்பல் – யானை ; முரம்பு – பருக்கைக் கற்களையுடைய மேட்டு நிலம் ; நடவை – சிறுவழி ) 

வெள்ளி, 17 ஜூன், 2016

மலைபடுகடாம் – அரிய செய்தி : 18

மலைபடுகடாம் – அரிய செய்தி : 18
தோல் படுக்கை
துய்ம் மயிர் அடக்கிய சேக்கை அன்ன
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி
தீத் துணையாகச் சேந்தனிர் கழிமின்
                   பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடு. 418   - 420
கோவலர்கள், மெல்லிய தலைமயிரினையடைய சேணம் இட்ட படுக்கையைப் போல ஆடுகளின் தோலை உரித்து, ஒன்றாகச் சேர்த்துத் தைத்து, வாரால் இறுக்கிக் கட்டப்பட்ட தோல் படுக்கையைப் பயன்படுத்துவர் ;  இரவில் கொடிய விலங்குகள் வாராதபடி தீயை மூட்டுவர் ; நீவிர் அவ்விடத்துத் தங்கிச் செல்வீராக.
( சேணம் – படுக்கை ; அதள் – தோள் ;  துய் – மெல்லிய .)