செவ்வாய், 20 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –295

 

தன்னேரிலாத தமிழ் –295.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு. குறள். 752

 

காவேரி ஓரம் கவிசொன்ன காதல்

கதைசொல்லி நான் பாடவா உள்ளம்

அலைமோதும் நிலை கூறவாஅந்தக்

கனிவான பாடல் முடிவாகு முன்னே

கனவான கதை கூறவாபொங்கும்

விழி நீரை அணை போடவா (காவேரி)

 

பொருளோடு வாழ்வு உருவாகும் போது

புகழ் பாடப் பலர் கூடுவார்அந்த

புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை

மதியாமல் உரையாடுவார்ஏழை

விதியோடு விளையாடுவார்அன்பை

மலிவாக எடைபோடுவார் என்ற

கனிவான பாடல் முடிவாகு முன்னே

கனவான கதை கூறவாபொங்கும்

விழி நீரை அணை போடவா (காவேரி)

 

அழியாத காதல் நிலையானதென்றே

அழகான கவி பாடுவார் வாழ்வில்

வளமான மங்கை பொருளோடு வந்தால்

மனமாறி உறவாடுவார்- கொஞ்சும்

மொழி பேசி வலை வீசுவார்தன்னை

எளிதாக விலை பேசுவார் என்ற            

கனிவான பாடல் முடிவாகு முன்னே

கனவான கதை கூறவாபொங்கும்

விழி நீரை அணை போடவா

 

மண வாழ்வு மலராத மலராகுமா

மனதாசை விளையாத பயிராகுமா

உருவான உயர் அன்பு பறிபோகுமா

உயிர் வாழ்வு புவிமீது சுமையாகுமா, சுமையாகுமா?

---கவிஞர்கே.டி.சந்தானம், படம்: ஆடிப்பெருக்கு, 1962.

 

1 கருத்து:

  1. காவிரியில் கரைபுரண்டு சுழித்து ஓடிவரும் பெருவெள்ளம் போல, கவிஞர் சந்தானம் அவர்களின் இனிய பாடல் வரிகள் இன்றும் கூட என் மனதில் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் என்பது முற்றிலும் உண்மை. வள்ளுவரின் கருத்துளை வெளிப்படுத்தும் ”பொருளோடு வாழ்வு உருவாகும் போது புகழ் பாடப் பலர் கூடுவார் –அந்த புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை மதியாமல் உரையாடுவார் – ஏழை விதியோடு விளையாடுவார் – அன்பை மலிவாக எடைபோடுவார் ”
    என்னும் வரிகள் என்றென்றும் உயிர் வாழும் தன்மையுடைய வலிமையான அழகிய சொற்கள் பொதிந்த கல்வெட்டு !

    பதிலளிநீக்கு