வெள்ளி, 24 ஏப்ரல், 2015

பாம்பின் வாய்ப்பட்ட யானை -2

– பாம்புச் செடி-அசுணம்  
அகல்வாய்ப் பாந்தள் படாஅர்ப்
பகலும் அஞ்சும் சுரனே
                  ஊட்டியார், அகநா. 68: 20,21
 அகன்ற வாயினையுடைய பாம்புச் செடியினையுடையதும் ஆகிய,  பகற்பொழுதினும் மிக்க நடுக்கத்தினைச் செய்யும் சுரநெறியில்..

பாந்தள் படார் = பாம்புபோலும் இயல்பினையுடைய ஒரு செடி.( Arisaema Leschenaulti  பி.எல். சாமி, சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்,1967, ப. 75. ) பாம்பு யானையை உண்ண வல்லது என்பதை – இடிகொள் வேழத்தை யெற்றொடும் எடுத்துடன் விழுங்கும் கடிய மாசுணம் “ கம்ப. சித்திரக் ; 35 மாசுணம் = பெரும்பாம்பு – (Rock Snake, Phythonidac)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக