வியாழன், 30 ஏப்ரல், 2015

பரிபாடல் சொல் வளம்

பரிபாடல் சொல் வளம்

கலிழ்கடல் – புடைபெயர்ச்சியுடைய கடல்

சிவிறி – துருத்தி / நீர் தூவும் குழல்

நீரெக்கி – (நீர்-எக்கி ) நீரைப் பீச்சுதல்

சீத்தல் – வீசுதல்

பாணி – காலம்

சாறு – விழா

படாகை – கொடி / வெற்றிக் கொடி

அரி – வண்டு

யாணு – அழகு

தாளிதம்  - கால் சட்டை / மகளிர் உள்ளாடை

விரவு நரை – கருமயிர் ஊடே விரவிய நரை

வெறு நரை – முழுதும் வெள்ளை

மழபுலவர் – இளம் அறிஞர்

மழவு – இளமை

வண்ணம் – இயற்கை அழகு

தேசு – செயற்கை அழகு

கோல் எரி / கோலெரி – தீ வர்த்தி / தீவட்டி

காமவேள் – அம்புத் தொழில் பயிலும் சாலை

தேயா மண்டிலம் – ஞாயிறு

தேயும் மண்டிலம்  - திங்கள்

பன்னீர் – மிக்க நீர்

சின்னீர் – சிறிது நீர்

கொம்மை – இளமுலை

வச்சியம் – வசியம் / வசிகரித்தல்


முனைவர்க்கும் – முனிவர்களுக்கும்

 ( மருளறு தேர்ச்சி முனைவர் என்றது  

வினையின் நீங்கி விளங்கிய அறிவுடையோரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக