வெள்ளி, 24 ஏப்ரல், 2015

குறும்பூழ்ப் போர்

குறும்பூழ்-63
பாலை
பெரும்புலர் விடியல் விரிந்துவெயில் எறிப்பக்
கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண்
                                        கருவூர்க் கண்ணம் புல்லனார், அகநா.63 : 6-8
வெயில் மிகுந்து எறிக்க கரிய மாலைபோன்ற கழுத்தினையுடைய சிவந்த குறும்பூழின் சேவல் தனது சிறிய புல்லிய பெடையுடன் குடையும் அவ்விடங்களையுடைய  காடு.
இத,முள் ஒப்பின் முகைமுதிர் ........ (  அகம்.133, இதல் / சிவல் = கவுதாரி, புறம்.319:6,
320:11)
குறும்பூழ்-இதல்
..................... வெவ்வினைப்
பயில் அரில் கிடந்த வேட்டுவிளி வெரீஇ
வரிப்புற இதலின் மணிக்கண் பேடை
நுண்பொறி அணிந்த எருத்தின் கூர்முள்
செங்கால் சேவல் பயிரும் ஆங்கண்
                          மதுரை மருதன் இளநாகனார், அகநா.387: 8-12

காடுகளில் மறைந்து வாழும் கொலைத் தொழிலுடைய வேடருக்கு அஞ்சி புறத்தே வரிகளையுடைய காடையின் நீலமணி போன்ற கண்களையுடைய பேடையானது, நுண்ணிய புள்ளிகளையுடைய கழுத்தினையும், கூர்மையான முள்ளைப் போன்ற விரல்களைக் கொண்ட சிவந்த கால்களையும் உடைய தன் சேவலை அழைக்கும்,

குறும்பூழ்ப்  போர்
பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
மேந் தோல் களைந்த தீம்கோள் வெள் எள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
வேனில் கோங்கின் பூம்பொருட்டு அன்ன
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட
கலிஆர் வரகின் பறங்குபீள் ஒளிக்கும்
வன்புல வைப்பினதுவே .......
உறையூர் மருத்துவன்  தாமோதனார், புறநா.321 : 1-7
குறும்பூழ்ப் பறவை(கெளதாரி / சிவல்  Indian Partridge) போர்ப் பயிற்சி தந்து பழக்கப்படும் பறவையாகும்.முறத்தில் உலர வைக்கப்பட்டுள்ள வெள்ளிய எள்ளைத் தின்று எலியைப் பற்றுவதற்காக வரகுப் போரில் பதுங்கிக் கொண்டிருக்கும்.
தலைவன் :-
செறிந்து ஒளிர் வெண்பல்லாய் யாம் வேறு இயைந்த
குறும்பூழ்ப் போர் கண்டேம் அனைத்தல்லது யாதும்
அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது
 மருதன் இளநாகனார், கலித். 95 :5-7
செறிந்து விளங்குகின்ற பல்லினை உடையாய், யாம் புதிதாக வேறு வந்து பொருந்தின குறும்பூழ்ப் போர் கண்டேம் ; அதையன்றிப் பிறிது நான் ஏதும் அறிந்ததில்லை ; நீ வேறு ஏதோதோ நினைக்கின்றாயே.
நச்சினார்க்கினியர் உண்மையான குறும்பூழ்ப் போர், பரத்தையாகிய குறும்பூழ்ப் போர் என இரண்டாகக் கொண்டு இருவகையாக உரைவரைந்தனர்.
சங்ககால மக்கள் பொழுது போக்காகப் பல விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தனர்; குறும்பூழ்ப் போரும் இத்தகைய விளையாட்டுக்களுள் ஒன்று.
மேலும் காண்க :-  1) Hungeree.com, Partridge fighting in Kabul.

2) Beauty  Withuout cruelty.India, Pune- 411 040

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக