அரசியல்
வாழ்வில் மக்கட்கு நால்வகை உரிமைகள் இன்றியமையாது வேண்டப்படுகின்றன என்பதை, இரண்டாவது உலகப்போரை
வெற்றியுற முடித்த அரசியலறிஞர் வற்புறுத்தியுள்ளார். அதனையுணர்ந்த அரசியலுலகம்,
அத்லாந்திக் சார்ட்டர் எனப்படும் உரிமையாவணம் வகுத்தது; அது நீர்மேல் எழுத்தாய் நிலைபேரின்றி
விளங்காதாக, பண்டைநாளில் நம் தமிழகத்தே அவ்வுரிமை விளங்கியிருந்ததென்று காட்டும்
பேரிலக்கியம் இப்புறநானூறு என இதனைக் கற்றுணர்ந்தோர் நன்கறிவர். பேச்சுரிம்மை,
வழிபாட்டுரிமை, அச்சமின்மை, வறுமையின்மை என்ற நான்கும் அத்லாந்திக் சார்ட்டரால்
உரிமைகளாக வற்புறுக்கப்படுகின்றன. இந்த நான்கையும் பண்டைத் தமிழர் தம்முடைய
பிறப்புரிமையாகக் கொண்டு வாழ்ந்த திறத்தை இப்புறநானூறும் ஏனைத் தொகைநூல்களும்
நன்குணர்த்துகின்றன. ஆராய்க .
- கலாநிதி
ஒளவை சு துரைசாமிப் பிள்ளை, முன்னுரை,
புறநானூறு மூலமும் – உரையும், தொ.1, பூம்புகார்
பதிப்பகம், மு.ப. 2009.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக