சனி, 25 ஏப்ரல், 2015

பாம்பு -

முட்டை  ஈன்ற அரவு
ஈன்ற அரவின் நாஉருக் கடுக்கும் என்
தொன்று படு சிதாஅர் துவர நீக்கி
                                   நல்லிறையனார், புறநா. 393 : 15,16
ஈனுதற்குரிய நாளை அடைந்து முட்டை ஈன்ற பாம்பினது நாவின் வடிவைப் போல  பழைமையுற்றுக் கிழிந்த பிளவுபட்ட  என் கந்தல் உடையை முற்றவும் நீக்கி ….. ( முட்டை ஈன்ற பாம்பின் நா பெரிதும் பிளவுபட்டுக் காட்டும் )
கட் கேள்வி-பாம்பு
யானும் ஏழ்மணி அம்கேழ் அணிஉத்தி
கண்கேள்வி கவை நாவின்
நிறன் உற்ற அராஅப் போலும்
            கோவூர்கிழார் , புறநா. : 382 : 11-14 - காண்க.126
யானும் எழுச்சியையுடய மணி, நிறம் பொருந்திய அழகிய படப் பொறி கொண்ட கண்ணாற் கேட்கும் திறன் பெற்ற பிளவுபட்ட நாக்கினை உடைய  நிறம் பொருந்திய பாம்பு தன் தோலை உரித்து நீக்கினாற்போல.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக