சேயோன்
நெடுவேள் மார்பின் ஆரம் போல
செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைங்காற் கொக்கினம் நிரைபறை உகப்ப
எல்லை பைப்பயக் கழிப்பி குடவயின்
கல் சேர்ந்தன்றே பல்கதிர் ஞாயிறு-
செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைங்காற் கொக்கினம் நிரைபறை உகப்ப
எல்லை பைப்பயக் கழிப்பி குடவயின்
கல் சேர்ந்தன்றே பல்கதிர் ஞாயிறு-
-
- நக்கீரனார்,அகம்.120:1-5
முருகக் கடவுள் மிக்க செந்நிறம் உடையவரென்பது சேய், செவ்வேள் என்னும் பெயர்களாலும் பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு,. பவழத் தன்ன மேனி என்பவற்றானும் அறியப்படும். செவ்வானத்திற்கு நெடுவேளின் செம்மேனியும் அவ்வானத்தையொட்டி வரிசையாகப் பறந்து செல்லும் கொக்கினத்திற்கு அவரது மார்பில் அணிந்த முத்தாரமும் உவமமாயின.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக