வெள்ளி, 17 ஏப்ரல், 2015

திரு லீ குவான் யூ...

  முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
  இறையென்று வைக்கப் படும் . (388)
மறைக்க இயலாத சாதனைகள் புரிந்த- மறக்க இயலாத மாமனிதர் திரு லீ குவான் யூ.. இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற அரசியல் தலைவர். சாதி மத இன வேறுபாடுகளைத் தூக்கி எறிந்து மக்களுக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்ட  மாபெரும் மனித நேயப் பண்பாளர். உலகத் தலைவர்கள் உவந்து படிக்க வேண்டிய அரசியல் கலைக் களஞ்சியம். தமிழுக்கு ஆட்சி உரிமை- தமிழர்களுக்கு வாழ்வுரிமை- தமிழீழத்திற்கு ஆதரவான ஆளுமை. தீபாவளிக்கு அரசு விடுமுறை ஆயினும் வெடிச் சத்தம் இல்லாத மகிழ்ச்சி வெள்ளம். உணவு விடுதியில் ஒரு கரப்பான் பூச்சி - மூன்று மாதங்களுக்கு அந்த உணவு விடுதி இழுத்து மூடப்பட்டது. வாய்மை- தூய்மை - நேர்மை- துல்லியமான ஒரு சனநாயக நாட்டிற்கு எடுத்துக்காட்டு - சிங்கப்பூர். திருவள்ளுவர் காணவிழைந்த சான்றோன் லீ குவான் யூ - நம் கண் முன்னே.  வாழ்க நீ எம்மான் - வள்ளுவன் தமிழ் போல்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக