வேதம்
ஞாலம் நாறும் நலம்கெழு நல் இசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்
ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய
-
பரணர், அகநா. 181:15 – 17
சோழ நாட்டில் ஆலமுற்றம் ( ஆலம் – ஆலமரம் ) என்னும் அழகிய
இடம் புது வருவாயையுடைய ஊர்களைக் கொண்டது. சோழர்காக்கும் சிறப்புடையது. காவிரி
புரக்கும் சிறப்பு, உலகம் யாவும் போற்றும் நல்ல புகழையுடைய நான்குவேதங்களைக் கொண்ட
பழம்பெரும் நூலைத் தந்தருளிய மூன்று கண்களையுடைய சிவபெருமான் எழுந்தருளிய
சிறப்பினைக் கொண்டது. ( வேதம் சிவபெருமானின் வாய்மொழியாம் என்பது நன்றாய்ந்த நீள்
நிமிர் சடை முதுமுதல்வன் வாய்போகாது ஒன்றுபுரிந்த ஈரிரண்டின், ஆறுணர்ந்த ஒரு
முதுநூல் – புறம் 166: 1-4 புலவர் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கெளணியன்
விண்ணந்தாயன் – பூஞ்சாற்றூர் தஞ்சை ,( மா.வ.)
கெளணிய பார்ப்பார் அனைவரும் தமிழ்ப் பற்றுடையர். நீண்ட சடையினையுடைய முதிய இறைவனது வாக்கை
விட்டு நீங்காது அறம் ஒன்றையே மேவிய நான்கு கூற்றையுடையதாய் ஆறு அங்கத்தாலும்
உணரப்பட்ட ஒரு பழைய நூலாகிய வேதத்துக்கு
மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலாயின புறச் சமயத்தோரது
மிகுதியைச் சாய்க்க வேண்டி - சங்கத்
தொகை நூல்களில் புத்தர், சமணர் முதலிய சமயத்தவரைப் பற்றிய குறிப்புகள் இன்மையின்,
இதுபொருந்தாமை உணரப்படும்- ஒளவை சு.து. உரை.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக