திங்கள், 20 ஏப்ரல், 2015

biriyaani

விருந்து
ஊனும் ஊணும் மினையின் இனிது என
 பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்துறுத்து ஆற்றி இருந்தனெம் ஆக
                                            நன்னாகனார், புறநா. 381 : 1- 4

இறைச்சியையும் சோற்றையும் உண்டு வெறுத்ததால், பாலிற் கலந்து செய்தனவும் வெல்லப்பாகிற் செய்தனவும் ஆகிய பண்ணியங்களை, இவை மிக இனிய என்னுமாறு அளவாக நன்கு கலந்து மென்மையாகப் பருகி விருந்தினர்களாகத் தங்கி, பசியைப் போக்கி இனிது இருந்தோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக