புதன், 22 ஏப்ரல், 2015

அன்றில்

அன்றில் பறவை
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியில் ...
                     மதுரை மருதன் இளநாகன், குறுந். 160 : 1 – 3
தோழி, நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய ஆண் அன்றில் பறவை, இறாமீனைப் போன்ற வளைந்த அலகினையுடைய தன் பெண் அன்றிலுடன், தடா மரத்தின் உயர்ந்த கிளையின்கண் உள்ள தன் கூட்டிலிருந்து, தம் காதலரைப் பிரிந்தோர்க்குச் செயலறவு தோன்றும்படி ஒலிக்கும்.
அன்றில், ஆணும் பெண்ணுமாய் இணைந்து வாழும் பறவைகள். கிரெளஞ்ச மிதுனம்  என்ற பறவையினம் போல இரட்டையாய் வாழ்வதால் புணர் அன்றில் எனப்பட்டது.அன்றில் ஒரு கண் துயின்று, ஒரு கண் ஆர்வத்தால் தன் துணைமேல் வைத்து உறங்கும் அன்புடைய பறவையாகும். இது, சக்கரவாகம் போல் பகலில் புணரும் பறவை என ரா, இராகவையங்கார் குறிப்பிடுவார். நாகாலாந்து பழங்குடி மக்களின் வழிபாட்டிற்குரியது. அன்றில் பறவையின் இறகுகளைத் தலையில்
சூடி மகிழ்ந்தாடுவர். ஆண் பறவை ஒரே பெண் துணையுடன் இணைந்து இறுதிவரை வாழும்.  நாகர்கள்-ஆண்மைக்கும் (வீரத்திற்கும் ) வளமைக்கும் அடையாளமாக இப் பறவையைப் போற்றி வருகின்றனர்.
நாகர்கள் தெய்வமாக மதித்துப் போற்றும் பறவை. இதன் இறகை தலையில் 
அறிவியல் நோக்கில் ஆய்க.
மேலும் காண்க : நற். 124, 152, 303. குறிஞ்சிப். 219
220மகன்றில்-இரும்புள்அகம்220


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக