தாய்ப்பால்
வாய் நன்கு அமையாக் குளனும் வயிறு ஆரத்
தாய் முலை உண்ணாக் குழவியும் சேய் மரபின்
கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் இம் மூவர்
நல்குரவு சேரப்பட்டார்
நல்லாதனார், திரிகடு. 84
ஊரா நல்தேர்
உருட்டிய புதல்வர்
தளர் நடை வருத்தம் வீட அலர் முலைச்
செவிலி அம் பெண்டிர்த் தழீஇப் பால் ஆர்ந்து
அமளித் துஞ்சும் ...
கடியலூர் உருத்திரங் கண்ணனார், பெரும்பாண்.
249 – 251
தச்சர்களின்
பிள்ளைகளும் விரும்பும்படி புனைந்த நல்ல சிறு தேர்களை உருட்டித் திரிந்த
சிறார்கள், அங்ஙனம் தளர் நடையிட்டுத் திரிந்த தம் வருத்தம் அகலும்படி பால் சுரந்த
முலையினையுடைய செவிலித் தாயரைத் தழுவிப் பாலை நிறைய உண்டு தமது படுக்கையிலே நன்கு
துயில் கொள்ளும் அழகையுடையனவாகிய நல்ல இல்லங்களையும் என்றவாறு. பெருமழைப் புலவர்
பத்துப்பாட்டு உரை ப. 117, கழகப்பதிப்பு, 2007.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக