புதன், 15 ஏப்ரல், 2015

சங்க இலக்கியச் செய்திகள்


3-பாண்டில் ஆடல்
பொரியரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
                    இளங்கீரனார், நற். 3 : 2-4
வேம்பினது புள்ளி போன்ற நிழலின்கண்ணே கட்டளைக் கல் போன்ற அரங்கை வட்டினாலே கீறி ஏனைத் தொழிலொன்றும் கற்றறியாத சிறுவர்கள் பாண்டிலாடா நிற்கும்.
4-நிமித்தம்
கானலம் சிறுகுடிக் கடல்மேம் பரதவர்
நீனிறப் புன்னைக் கொழுநிழ லசைஇத்
தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி
               அம்மூவனார், நற்.4 : 1-3
பரதவர் புன்னை நிழலிலே தங்கி கடற்பரப்பிற் செல்லுதற்கு நல்ல அற்றம்( பதம்) பார்த்து….
தாவரவியல்
குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர்
நறுங்காழ் ஆரஞ் சுற்றுவன அகைப்பப்
                    பெருங்குன்றூர்கிழார், நற். 5 :3,4
குறவர் வெட்டியழித்த  குறைபட்ட  நறைக்கொடி மீண்டும் தளிர்த்துக் கொடியாகி நறுமணம் கமழும் வயிரம் முற்றிய சந்தன மரத்தின் மீது படர்ந்து சுற்றியேறவும்…. ( ஏனை மரம் கொடிகள் இவற்றின் வேர் சந்தன வேரொடு முயங்காதவழி  தனித்துள மரம் நறுமணம் எய்தாமை கண்கூடாகக் காண்டலால், ஈண்டு நறைக்கொடிசுற்றுவது கூறி நறுங்காழ் ஆரம் என்றார்பின்னத்தூரார்.)
6-தாவரவியல்
தத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
எறிமட மாற்கு வல்சி யாகும்
                பரணர், நற். 6 : 7, 8
சுரத்தில் உள்ள குமிழ மரத்தின் வளைந்த மூக்கினை உடைய முற்றிய கனிகள் கீழே உதிர்ந்து அங்கே குதித்து விளையாடும் இளமானுக்கும் வெறுப்பில்லா உணவாகும்.( குமிழம் பழம்)
8-தழை ஆடை
பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல்
                                    ........................., நற்.8:2
அழகிய இவளைப் பெற்ற தந்தையும் தாயும்.
யார் மகள் கொல் இவள் தந்தை வாழியர்
...............................................
திண்டேர்ப் பொறையன் தொண்டி
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே

                      தந்தை வாழ்க,  திண்ணிய தேரையுடைய பொறையனது தொண்டி நகர் போன்ர சிறப்பினைப் பெறுவாளாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக