இடங்களுக்கு
பெயர் வைக்கும் போது அவை காரணப் பெயர்களாக அமைந்து விடுவதே
பெரும்பான்மையான வழக்கு, யாழ்பாடி பரிசு பெற்ற மணற்றிடர் யாழ்ப்பாணம்
ஆயிற்று, மூன்று கோணம் உள்ள மலை திரிகோணமலை என்றும்,
திருக் கோண மலை என்றும் பெயர் பெற்றது.மட். மட்டு மட்டும் களப்பாள் இருந்தது மட்டுக்களப்பாயிற்று,
செங்கற்பட்டு மாவட்டம், செங்கற்பட்டு வட்டத்தில் உள்ள பொன்விளைந்த களத்தூரே, களந்தை என்று ஒரு சாராரும், தஞ்சாவூர் மாவட்டம் திருத்தருப்பூண்டி
வட்டத்திலுள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊரே களந்தை என்று வேறு ஒரு சாராரும்,
கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சிவட்டத்திலுள்ள பெரிய களந்தை என்ற
ஊரே களந்தை என்று மற்றொரு சாராரும் கூறிவருகின்றனர். இவைகளின் வன்மை மென்மைகளை
ஆராய்வாம்.
பொன்விளைந்த களத்தூர், களந்தை என்று மரூஉ மொழியாக வழங்கப்பெறும். இவ்வழக்கைத் தொண்டைமண்டல சதகத்தால் அறியலாம். ஆனால், இவ்வூரில் உள்ள கோயிலின் பெயர், சயங் கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துக் களத்தூர் பெருந்திருக்கோயில் என அவ்வூர்க் கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன. 1 ஆதலால் இக்களத்தூர் திருவிசைப்பாப் பெற்ற கோயில் களந்தை ஆகாது.
கல்வெட்டு:
நாகை மாவட்டம் திருத்தருப்பூண்டி வட்டத்தில் உள்ள
களப்பாழ்
(களப்பாள்) என்ற ஊரில், அழகிய நாதசுவாமி
யிலில் பதினான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. 1 அவைகளுள்
ஒன்று நீங்கலாக (எண் 169) ஏனையவைகள் அனைத்திலும் இறைவன்
திருப்பெயர் \"ஆதி புராணீஸ்வரம் உடைய நாயனார்\"
என்றே குறிக்கப்பெற்றிருக்கிறது. அந்த 169 எண்ணுள்ள
கல்வெட்டில் ஆதித்தேச்சுரம் உடையார் என்று குறிக்கப்பட்டிருக் கிறது. இக்
கல்வெட்டு வேறு எங்கிருந்தோ கொண்டு வந்து வைக்கப் பட்டதாகும்.
கல்வெட்டுத்துறையினரும் இக்கல்லை கோயில், கயிலாசநாதர்கோயில், ஆனைகாத்த பெருமாள்கோயில் என்னும் மூன்று திருக்கோயில்கள் இருக்கின்றன. அவைகளுள் அழகிய நாதசுவாமி கோயிலில் உள்ள பாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவரின் 23ஆம் ஆண்டு 204ஆம் நாளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, அவ்வூர் இறைவனை, களப்பாள் உடையார் திருஆதித் தேச்சரமுடையார் என்று குறிப்பிடுகிறது. களப்பாள், களந்தை என்று மருவி வருதலும் உண்டு. ஆதலில் இந்தக் களப்பாள் ஆதித்தேச்சரமே கருவூர்த்தேவர் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும். `அந்தணர் அழலோம்பு அலைபுனல் களந்தை\' எனவும், \"குழையராய் வந்தென் குடிமுழு தாளுங் குழகரே ஒழுகுநீர்க் கங்கை அழகரே யாகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே\" (தி.9 ப.9 பா.4) எனவும் திருக்களந்தை யாதித்தேச்சரத் திருவிசைப்பா அடிகள், இக்களப்பாள், அழலோம்பும் அந்தணர்கள் வாழுமிடம் என்பதையும், இறைவரின் திருப்பெயர் அழகர் (அழகியநாதசுவாமி) என்பதையும் உணர்த்துகின்றன. கயிலாசநாதர்கோயில், ஆனைகாத்த பெருமாள் கோயில் இவைகளில் உள்ள கல்வெட்டுக்கள் இராஜேந்திர சோழவள நாட்டு, புறங்கரம்பை நாட்டு அகரம் முடிவழங்குசோழபுரம் என்று இவ்வூரைக் குறிப்பிடுகின்றன. ஆதலின் அந்தணர்கள் இவ்வூரில் இருந்து வருகின்றனர் என்பதைக் கல்வெட்டுக்களும் தெரிவிக் கின்றன. இறைவர்க்கு வழங்கிவரும் அழகியநாதசுவாமி என்பதற்கு ஈண்டுக் குறித்துள்ள திருவிசைப்பா அடிகளிலும் சான்று இருக்கின்றது. `அந்தணீர்க் களந்தை\' `அலைபுனற் களந்தை\' எனத் திருவிசைப் பாவில் வருவதால், இக் களந்தை நீர்வளம் பொருந்தியது என்று பெறப் படுகின்றது. அதற்கு ஏற்ப இவ்வூர் முள்ளியாற்றுப் பாய்ச்சல் உடைய தால் நீர்வளத்துக்குக் குறைவேயில்லை. ஆதலின் இக் களப்பாள் என்னும் ஊரே கருவூர்த் தேவரின் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும். பெரிய களந்தை ஆதிபுரீஸ்வரர் திருக்கோதொடர்பற்ற கல் எனக் குறித்துள்ளனர். ஆதலின்
இப்பெரிய களந்தை திருவிசைப்பாப் பெற்றதன்று. இறைவரின் திருப்பெயர்:
ஆதித்தேச்சுவரர்; அழகியநாத சுவாமி. இறைவியாரின் திருப்பெயர்:
பிரபாநாயகி. வழிபாடாற்றியவர்: ஆதித்தசோழன், கூற்றுவநாயனார். இவ்வூரின்
சிறப்பு: கூற்றுவநாயனாரது அவதார ஸ்தலம் இக்களப்பாள் ஆகும். \"கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே\" என்பது
திருத்தொண்டர் திருவந்தாதி. கல்வெட்டு வரலாறு: இவ்வூர்க் கோயில்களில் 12 கல்வெட்டுக்கள் (1 See the Annual Reports on South Indian
Epigraphy for the years 1902 Nos.656-663, -1925 Nos. 334-337 and S.I.I.Vol.
VIII Nos. 261-268. ) இருக்கின்றன. இவைகளுள் அழகியநாத சுவாமி கோயிலின்
இருகல்வெட்டுக்களின் மூலங்கள், தென் இந்தியக் கல்வெட்டுத்
தொகுதி எட்டில் வெளி வந்திருக்கின்றன. அவைகளுள் ஒன்றினைக் குறிப்பிடுகின்றேன்.
\"ஸ்வஸ்திஷ்ரீ கோமாறு பன்மர் திரிபுவனச் சக்ரவர்த்திகள்
சிறிகுலசேகர தேவற்கு யாண்டு 23 24 ள் பங்குனி மீ களப்பாள் உடையார்
திருவாதித்தீசுரமுடையாற்கு வரகூருடையார் பிள்ளை காடுவெட்டியார் மகனார் சொக்க
நாயனார் கட்டின சந்தி ஒன்று.\" இவற்றால் களப்பாள்
என்பது ஊரின்பெயர் என்பதும், ஆதித் தேச்சரம் என்பது கோயிலின்
பெயர் என்பதும் புலப் படுகின்றன.
இக்கட்டுரை வழகிய தமிழறிஞர்- நன்றியுடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக