விஞ்ஞான
பீட விருது – சிறுகதை – 2
சங்கரன் தத்துவ மேதையாகவே பிறந்தார் “ என்று சொல்வார்கள்.
சிறுவயதில் பள்ளிக்கூடம் சென்றாராம்; ஆனால் படிப்பதற்கு இல்லையாம் அங்கிருக்கும் ஆசிரியர்களுக்குப்
பாடம் சொல்லிக்கொடுக்கத்தான் போனாராம். பள்ளிப் பருவத்திலேயே இவர் ஒரு குட்டித் தத்துவ
மேதையாக விளங்கியவர்.
இவர் தொடாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். அத்தனை
துறைகளிலும் ஆராய்ச்சி செய்துள்ளார்.நாம் ஏன் துக்கப்படுகிறோம் நாம் ஏன் வெட்கப்படுகிறோம் ? நமக்கு ஏன் அழுகை வருகிறது
? நமக்கு ஏன் சிரிப்பு வருகிறது ? நமக்கு ஏன் மலம் வருகிறது என்ற தலைப்புகளில் இவர்
எழுதியவை ஏராளம்.அத்தனையும் ஆன்மிகத்தின் அசையாச் சொத்து; இவர் எழுதிய மனிதன் ஏன் அழுகிறான்
? என்ற நூலுக்குத்தான் விஞ்ஞான பீட விருது கிடைத்திருக்கிறது. கிரிக்கெட்டைப் பற்றி
பேசாவிட்டால் நம்மை கேவலமாக நினைப்பார்கள் என்று சிலர் கருதுவதுபோல எங்கள் வார இதழாகிய
ஊ (துகு) ழல் அவரைப் பேட்டி எடுத்து போட்டு சாபவிமோசனம் பெறவிரும்பியது அதற்குச் சரியான
ஆள் நான் தான் என்று என்னை அனுப்பினார்கள்…..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக