கார்த்திகைவிழா
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம்காட்டு
இலைஇல மலர்ந்த முகைஇல் இலவம்
கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அம்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி
ஒளவையார், அகநா. 11: 1-5
ஞாயிற்று மண்டிலம்
நெருப்பைப் போல் சிவந்து சுட்டெரிக்கும் வெப்பம் – காடு – இலை இல்லை- அரும்பு
இல்லை – ஒருங்கே மலர்ந்த இலவம் பூக்கள் – மகிழ்ச்சி- மகளிர் கூட்டம் –
சேர்ந்துஎடுத்த – கார்த்திகை விளக்கின் நெடிய வரிசை போல – பொலிவுடன்
தோன்றும்.கார்த்திகை விழா தொன்றுதொட்டுக் கொண்டாடப் படுவதை அகம்.141, 185 காண்க.
புத்தாண்டு
நலமிகு
கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விள்க்கில் தகை உடையவாகி
மதுரைக் கண்ணங்கூத்தனார், கார்.நா.
26
தலைநாள்-
திருவிழாவின் முதல் நாளாகிய கார்த்திகை, நலமிகு கார்த்திகை என்பதனை அத்திங்களில்
சிறந்த நாளாகிய கார்த்திகை எனக் கொள்ளலும் ஆம், முன்பு நாட்கள் கார்த்திகை முதலாக
எண்ணப்பட்டனவாகலின் தலைநாள் என்றார் எனலுமாம். ந.மு.வே. நாட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக