திங்கள், 20 ஏப்ரல், 2015

சங்க இலக்கியச் செய்திகள்

சான்றோர் பழிக்கும் வினைபுரிந்த மன்னர்கள்
 நன்னன் மருகன் அன்றியும் நீயும் முயங்கற்கு
ஒத்தனை மன்னே வயங்கி மொழிப்
பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடுமழை
அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்
மணம் கமழ் மால்வரை வரைந்தனர் எமரே
                                                   வன்பரணர், புறநா.151: 8 - 12     
நின் முன்னோன் பெண் கொலை புரிந்த நன்னன் ஆவான்;நின் நாடு பாடிவருவார்க்குக் கதவு அடைக்கும் தன்மையது; ஆதலால் எம்போல்வார் நின் விச்சிமலையைப் பாடுதல் ஒழிந்தனர்.மேலும் காண்க : 375, குறுந்.292 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக