சுனாமி
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி
உரவுத் திரை கடுகிய உருத்து எழு வெள்ளம்
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து
அரிசில் கிழார், பதிற்றுப். 72: 9 – 11
எல்லா உயிர்களும் அழியும் ஊழிக் காலத்தில் இறுதி புகும்போது,
நிலவுலகின் சுமை நீங்க நீரானது எங்கும் பரந்து எழும் இவ்வாறு உயிர்களைக் கொல்லுதற்குச் சினந்து எழுகின்ற
வெள்ளம் எல்லை இன்னதென்று வரையறுத்து அறிதற்கு இயலாத திசைகளில் இருளொடு சேர்ந்து
பரக்கும்.
மேலும் காண்க:
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள –( சிலம்பு.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக