ஐம்பால் கூந்தல்
ஐந்து வகையாகப் பகுக்கப்படும் கூந்தல் – குழல், அளகம்,
கொண்டை, பனிச்சை, துஞ்சை. படம் வரைந்து வெளிப்படுத்துக.
.................... வண்டுஅடர் ஐம்பால்
பரணர்,
அகநா. 181:23
கதுப்பு ஒப்பனை
கூந்தல் – ஐவகை ஒப்பனை
உச்சியின் முடிதல்
பக்கத்தில் முடிதல்
பின்னிச் செருகல்
சுருட்டி முடிதல்
சடை பின்னி விடுதல்
மிசோரம் பழங்குடியினர் இவ்வகையான கூந்தல் ஒப்பனைகள் செய்வர்.
கூந்தல் மணக்கும்
நாறைங் கூந்தற் கொம்மை வரிமுலை
மாமூலனார்,அகநா.65:18
மணம் நாறும் ஐவகைக் கூறுபாடும் அமைந்த கூந்தலினையும்...
ஐம்பால்கூந்தல்
அகம்.145.
378 – கூந்தலில் மணம்
நிதியம் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள்
-
காவட்டனார், அகநா. 378 : 1,2
மிக்க பொருள்
தங்கும் உயர்ந்தோங்கும்
மனையகத்தே, கலியாணம் செய்த மகளிர்தம் கூந்தல்போல் மணம் பொருந்துமாறு….
மணங்கமழும் வேங்கை மரத்தின் பொன்னிறத் தாதுக்கள் காற்று அடித்தலால் உதிர….
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேல் உண்கண்
வேய்த்தோள் அவட்கு
குறள். 1113
வேய் போலும் தோளினை
உடைய அவளுக்கு நிறம் தளிர் நிறமாயிருக்கும், பல் முத்தமாயிருக்கும் இயல்பாய நாற்றம் நறு நாற்றமாயிருக்கும் உண்கண்கள் வேலாயிருக்கும்.
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
|
|
காமம் செப்பாது, கண்டது மொழிமோ:
|
|
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
|
|
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
|
|
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?
இறையனார்.
(பி-ம்) 2. ‘கண்டன’.
(ப-ரை.) பூந்தாதை ஆராய்ந்து உண்ணுகின்ற
வாழ்க்கையினையும், - உள்ளிடத்தே
சிறையையும் உடையவண்டே, என் நிலத்து வண்டாதலின் யான்
விரும்பியதையே கூறாமல்
, - நீ கண்கூடாக அறிந்த தையே சொல்வாயாக:
- நீ அறியும் மலர்களுள், - எழுமையும்
என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும் - மயில்
போன்ற மென்மையையும், -
நெருங்கிய பற்களையும் உடைய, - இவ்வரிவையின் கூந்தலைப் போல,
-
நறுமண முடைய பூக்களும், - உள்ளனவோ?
(முடிபு) தும்பி, நீ அறியும் பூக்களுள் அரிவையின் கூந்தலைப் போல நறியனவும்
உளவோ? மொழிவாயாக.
(கருத்து) தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது.
சிறு வெள்ளாம்பல் அல்லியுண்ணும்
கழிகல மகளிர் போல
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே
மாறோக்கத்து நப்பசலையார்,புறநா.280:13-15
உரை:- சிறிய வெள்ளிய ஆம்பலிடத்து உண்டாகும் அல்லி அரிசியை உண்ணும் , அணிகலன்களைக் கழித்த கைம்பெண்டிர் போல தலைவன் இறந்த வழிப் பின்னே வாழும்
திறம் நினைந்து யானும் இங்கே உயிர் வாழ்ந்திருப்பது அதனினும் அரிதாம் – எனத் தலைவி வருந்துகிறாள்.
மகளிர்
கணவனை இழந்தபின் அவர் ஒருவராலன்றிப் பிறரால் தீண்டப்படாத தம் கூந்தலைக்
கழித்துவிடுவது பண்டையோர் மரபு. கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி,அல்லியுணவின்
மனைவி (புறநா. 250) எனப் பிறரும் கூறுவது காண்க. மென்சீர்க் கலிமயிற் கலாவத்தன்ன
இவள், ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே(குறுந். (225) எனவும் குறுந்தொடி
மகளிர், நாளிருங் கூந்தற்கிழவரைப் படர்ந்து ( புறநா.113 ) எனவும் சான்றோர்
கூறுவனவற்றால் மகளிர் கூந்தலைத் தீ ந்டும் உரிமை கணவர் ஒருவற்கே உண்டென்பதும்
என்வே கூந்தற்குரியர் இறந்தவழி கூந்தலும் உடன்கழிதல் முறைமையென்பதும் பண்டையோர்
கொள்கையாதல் தெளியப்படும். மழித்த தலை மழித் தலையெனவும் வைத்த தலை
வைத்தலை(பதிற்.44) எனவும் வருதல் விகாரம். ஒளவை சு.து.உரை.
301 – குமரியின் கூந்தல் – பிறரால் தீண்டப்படாத
குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரின் இட்ட அருமுள் வேலி
ஆவூர்
மூலங்கிழார், புறநா.301 : 2, 3
மணம் செய்யப்பெறாத பெண்ணின் கூந்தலைப் போல ஒருவராலும்
தீண்டப்பெறாத இயல்புடைத்தாய் போர்குறித்து இடப்பட்ட இடுமுள் வேலி.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக