ஞாயிறு, 3 மே, 2015

கண்ணீர்

கண்ணீர்-வெம்மை
மார்புதலைக் கொண்ட மாணிழை மகளிர்
கவலே முற்ற வெய்துவீ ழரிப்பனி
                                                  கொற்றனார், நற். 30 ;5,6
பரத்தையர் பலரும் நீ பிரிந்ததால் கவலையுற்று கண்களினின்று வெப்பமாய் வடிகின்ற கண்ணீருடனே. ஒப்பிடு- இமை தீய்ப்பன்ன….


. இமையைத் தீய்க்கும் கண்ணீர்
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி
                                        காமம் சேர்குளத்தார், குறுந்.4 :1, 2
பிரிவாற்றாமையால் வரும் கண்ணீராதலால் வெம்மையுடையதாகக் கூறப்பட்டது.
துன்பத்தில்விடும் கண்ணீர் சூடாக இருக்குமா ? கண்ணீரின் தன்மை குறித்து அறிவியல் கூறுவது யாது ? – ஆய்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக