பண்டைய தமிழ்நாடு
முன்னோர் பெருமை
தென்குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய
கொடிது கடிந்து கோல் திருத்தி
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல
(குறுங்கோழியூர் கிழார், புறம்.17:1-8)
உரை:தென் திசையில் கன்னியையும் வட திசையில் இமயத்தையும் கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் கடற் பரப்பையும் எல்லைகளாகக் கொண்டு இவ்விடைப்பட்ட நிலம் விளங்கும். இங்கு, குன்றும் மலையும் காடும் நாடும் எனப் பல்வகை நிலப் பகுதிகள் உடையோர் பலரும் ஒருமைப்பட்டு வழிபடவும் தீயன போகவும் கோல் செங்கோலாகவும் உரிய இறைப் பொருளுண்டு நடுவுநிலையுடன் தம் சுடர் விளங்கும் ஆணைச் சக்கரத்தை இனிதாகச் செலுத்தவும் வல்லவராய் வாழ்ந்தோர் நின் முன்னோர், அவ்வாறிருந்து மண் முழுதும் ஆண்ட அன்னவர்தம் மரபினைக் காத்தவனே.
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும் நெடுஞ்செழியனும் போரிட்டனர், போரின் முடிவில் இரும்பொறையைச் செழியன் சிறையில் பிணித்தான், அங்கிருந்து தப்பித் தன் அரசு கட்டில் ஏறிய தன்மையை இப்பாட்டுள் குறுங்கோழியூர் கிழார் குறிப்பிடுகின்றார்.

காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்
சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொருகளத்து ஒழிய
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய – 8-12 –பரணர்,அகம் 246
அகம்
55 ஆம் பாடலில் கரிகாலனோடு வெண்ணியில் போர் புரிந்து புறப்புண் பட்ட நாணிய பெருஞ்சேரலாதன் சான்றோர் சிலருடன்
வடக்கிருந்து உயிர் நீத்தான்.. வெண்ணியில் பதினொரு வேளிருடன்
இருபெரும் வேந்தரும் போரிலே நிலைகுலைய
அவர்தம் வலிமை அழித்து வென்றான்.
தானே வடவரைத் தண்கடற் கண்ணே
திருமூலர்,
திருமந்.1141
பண்டு தமிழ்நாட்டின் வடஎல்லையாக அமைந்த இமயமலையாக நிற்பள்.
இம்மலை ஆதற்கு முன் கடலின்கண் அமிழ்ந்திருந்தது அது தென் கடற்கோளால் மேலெழுந்தது.
வடவரை –தமிழ்நாட்டின் வடக்கின்கண்ணேயுள்ள இமயம். தண்கடற்கண்ணே – தண்கடலாயிருந்த இடத்தின்கண்ணே
மேலே கிளம்பிய
( வடவரை என்று கொள்க ) கழகப் பதிப்பு.
பண்டு நற்கு அறியாப் புலம்பெயர் புதுவிர்
சந்துநீவிப் புல் முடிந்து இடுமின்
மலைபடு.
392,93
பண்டே
வழி தெரியாமல் புதிதாகப் போகும் வெளியூர் மக்களே, நீங்கள் செல்லும்
வழியில் அடையாளமாக வழியில் உள்ள புல்லை நீக்கி முடிந்து விட்டுச் செல்லுங்கள்.
ஏடங்கை நங்கை – வேதம் ஆகமங்களைச் சுவடி உருவமாகக் கையில் வைத்துள்ள மனோன்மனி ( இதனால் சதாசிவ தத்துவம் ஆரம்பத்திலேயே வேதாகமங்கள் எழுதப்பட்டுச் சுவடி உருவமாய்ச்
சத்தி கையில் இருந்தன என்று ஏற்படுவதாலும் வடமொழி எழுத்தில்லாத மொழியானதாலும் எழுதும்
மொழி தமிழ் ஆனபடியாலும் வேதாகமங்கள் தமிழ் மொழொயிலேயே இருந்தன என்றும் அது பிற்காலத்தில்
தமிழ்நாடாகிய இந்தியாவுக்கு ஆரியர்கள் வந்த காலத்தில் தமிழ் எழுத்துக்களாகிய கிரந்தத்திலும்
தமிழின் வழிமொழியாகிய பஞ்ச திராவிடத்தில் ஒன்றான மராட்டிய ( தேவநாகரம்
) எழுத்துக்களிலும் எழுதப்பட்டன என்பது தெளிவாகின்றது.-1043 திருமந்திரம், கழகப் பதிப்பு உரை..
– தமிழ் நாட்டின் எல்லைகள்
தமிழ்கெழு
மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே
-மாமூலனார்,
அகம். 31 : 14, 15
தமிழ் நாட்டினை ஆளும் மூவராலும் காக்கப்பெறும் வேற்றுமொழியினையுடைய
தேயங்களிலுள்ள பல மலைகளையும் கடந்து ….. ( தமிழ்மொழியின் வேறாய மொழி வழங்கும் தேயம் என்றுமாம்.)
மேலும்
காண்க – புறம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக