வெள்ளி, 22 மே, 2015

41 - செவ்விலக்கிய நூல்கள்-இரட்டைக் காப்பியங்கள்

41 -  செவ்விலக்கிய நூல்கள்
கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையிலானவை
ஓர் அறிமுகம்
  தொல்காப்பியம்- எட்டுத்தொகை – பத்துப்பாட்டு – பதினெண்கீழ்க்கணக்கு – சிலப்பதிகாரம் – மணிமேகலை – முத்தொள்ளாயிரம் – இறையனார் களவியல்.


சிலப்பதிகாரம்

          சிலப்பதிகாரம் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகும்முதன்முதலாகக் குடிமக்களைக் காப்பியத் தலைவர்களாகக் கொண்டு பாடப்பெற்றதால், இந்நூல் குடிமக்கள் காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது.

            இக்காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்குணவாயில் கோட்டம் என்ற சமணப்பள்ளியில் இளங்கோவடிகள் இருந்தபோது சீத்தலைச்சாத்தனார், புகாரில் தோன்றிய கண்ணகி, மதுரையை எரித்தது குறித்தும், அவள் முற்பிறவி குறித்தும் விளக்கமாகக் கூறினார்இவ்வரலாற்றை அறிந்த இளங்கோவடிகள்,

            'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
            உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
            ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்'

என்ற மூன்று கருத்துகளின் அடிப்படையில்  இக்காப்பியத்தைப் படைத்தார்.


காப்பியப் புனைவில் சிலம்பு சிறப்பிடம் பெறுவதால் சிலப்பதிகாரம் என்று இக்காப்பியத்திற்குப் பெயர் சூட்டினார்.

 இளங்கோவடிகள் தமிழ் மரபையும் பண்பாட்டையும் வாழ்க்கை முறைகளையும் தமிழ் இசை, தமிழ்க் கூத்துப் போன்ற கலைகளையும்  காப்பாற்றி நமக்களித்துள்ளார்.

இக்காப்பியம் புகார், மதுரை, வஞ்சி என 3 காண்டங்களையும் 30 காதைகளையும் கொண்டது.


       
            காண்டம்
          
                காதைகள் (10)

1.
புகார்க் காண்டம்
1.      மங்கல வாழ்த்துக் காதை


2.      மனையறம் படுத்த காதை


3.      அரங்கேற்றுக்காதை


4.      அந்தி மாலை சிறப்புச் செய்காதை


5.      இந்திர விழவு ஊர் எடுத்த காதை


6.      கடல் ஆடு காதை


7.      கானல் வரி


8.      இளவேனில் காதை


9.      கனாத்திறம் உரைத்த காதை


10.   நாடு காண் காதை



2.
  மதுரைக் காண்டம்
 காதைகள்  (13)



1.      காடு காண் காதை


2.      வேட்டுவ வரி


3.      புறஞ்சேரி இறுத்த காதை


4.      ஊர் காண் காதை


5.      அடைக்கலக் காதை


6.      கொலைக் களக் காதை


7.      ஆச்சியர் குரவை


8.       துன்ப மாலை


9.      ஊர் சூழ் வரி


10.   வழக்குரை காதை


11.   வஞ்சின மாலை


12.   அழற்படு காதை


13.   கட்டுரை காதை.




3.
    வஞ்சிக் காண்டம்
 காதைகள் (7)


1.       குன்றக்குரவை


2.      காட்சிக் காதை


3.      கால்கொள் காதை


4.      நீர்ப்படைக் காதை


5.      நடுகற் காதை


6.      வாழ்த்துக் காதை


7.      வரந்தரு காதை

என இவ்வாறு சிலப்பதிகாரம் அமைந்துள்ளது'வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு'  எனத் தமிழகத்தின் பகுதிகளாகிய சேர, சோழ, பாண்டிய நாடுகளின் இயல்புகளையும் அவற்றின் தலைநகர்களாகிய வஞ்சி, புகார், மதுரை ஆகியவற்றின் பெருமைகளையும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிமுறை, வீரம், ஆற்றல், குடிகளின் ஒழுக்கம் ஆகியவற்றைப் பற்றியும் பேசுகிறது சிலப்பதிகாரம்.

            இந்நூல் 1892ஆம் ஆண்டு . வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப் பெற்றது.

மணிமேகலை

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று மணிமேகலைஇந்நூலாசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார்இந்நூல் 30 காதைகளைக் கொண்டது.

சிலப்பதிகாரக் கதைத் தலைவனான கோவலன் மகளாகிய மணிமேகலை என்பவளுடைய வரலாற்றைக் கூறுவதால் இந்நூல் சிலப்பதிகாரத்தோடு தொடர்புடையதுஎனவே இரண்டையும் இணைத்து இரட்டைக் காப்பியம் என்று அழைக்கும் மரபு உள்ளது.

புத்த மதத்தினர் கூறும் நான்கு மெய்மைகளான துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் ஆகியவற்றைப்

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
  பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்
  பற்றின் வருவது முன்னது; பின்னது
  அற்றோர் உறுவது அறிக



என்று அழகுற எடுத்துக்கூறுகிறது மணிமேகலை.

            மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
              உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே


என்று பசிப் பிணி ஒழிய அறம் உரைக்கிறது.

            காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த பெருவணிகன் மாசாத்துவான் மகன் கோவலனுக்கும் ஆடல் பாடல் அழகு ஆய மூன்றும் முற்றும் நிறைந்த மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் வரலாற்றை எடுத்துச் சொல்வது இதுஇடையிடையே கிளைக்கதைகளும் அறமுறைகளும் அறவுரைகளும் பெற்றுத் திகழ்வது இந்நூல்.

            கூலவாணிகன் சாத்தனார் புத்தமதக் கருத்துக்களைப் புலப்படுத்தவே மணிமேகலைக் காப்பியத்தைப் படைத்தார்சாத்தனார் இக்காப்பியத்திற்கு இட்ட பெயர் மணிமேகலைத் துறவுஇது காலப்போக்கில் மணிமேகலை என்று நிலைத்துவிட்டது.
            சிலப்பதிகாரம் போலவே இதுவும் முப்பது காதைகளைக் கொண்டு விளங்குகின்றது.

            இந்நூல் 1894ஆம் ஆண்டு திருமயிலை சண்முகம் பிள்ளை பார்வையிடப்பட்டுக்  முருகேச செட்டியாரால் பதிப்பிக்கப்பெற்றது.

  1. விழா அறை காதை
  2. ஊர் அலர் உரைத்த காதை
  3. மலர்வனம் புக்க காதை
  4. பளிக்கறை புக்க காதை
  5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை
  6. சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை
  7. துயில் எழுப்பிய காதை
  8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை
  9. பீடிகை கண்டு பிறப்பு உணர்ந்த காதை
  10. மந்திரம் கொடுத்த காதை
  11. பாத்திரம் பெற்ற காதை
  12. அறவணர்த் தொழுத காதை
  13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
  14. பாத்திர மரபு கூறிய காதை
  15. பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை
  16. ஆதிரை பிச்சை இட்ட காதை
  17. உலக அறவி புக்க காதை
  18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை
  19. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை
  20. உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் எறிந்த காதை
  21. கந்திற்பாவை வருவது உரைத்த காதை
  22. சிறை செய் காதை
  23. சிறை விடு காதை
  24. ஆபுத்திரன்நாடு அடைந்த காதை
  25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை
  26. வஞ்சிமா நகர் புக்க காதை
  27. சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை
  28. கச்சி மாநகர் புக்க காதை
  29. தவத் திறம் பூண்டு தருமம் கேட்ட காதை
  30. பவத் திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக